பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 30了 நேரமாகிறதே! இலைகள் போடச் சொல்லலாமா? நீங்களும் இன்று இங்கேதான் சாப்பிடவேண்டும்' என்றாள். அதைக் கேட்ட அம் மணிபாயி, "சாப்பாடா? நாங்கள் இரண்டு பேரும் இப்போதுதான் சாப்பிட்டு உடனே புறப்பட்டு வந்தோம். எங்களுக்கு இனி நாளைக்குத்தான் சாப்பாடு. நீங்கள் இன்னும் சாப்பிடவில்லை போலிருக்கிறது; அப்படியானால் போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள். ஐயாவும் இன்னும் சாப்பிடவில்லை போலிருக்கிறது' என்றாள். லீலாவதி, "நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டோம்; ஒரு வேளை நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீர்களென்று நினைத்து அப்படிச் சொன்னேன். கமலத்துக்கும் அண்ணிக்கும் தயாரித்த சாப்பாடு இருக்கிறது” என்றாள். - அதைக் கேட்ட ஜெமீந்தார், 'ஏன் கண்ணம்மா! நீ கீழே போனாயே! மாரியம்மன் கோவிலுக்கு யாரை அனுப்பினாய்?" என்றார். லீலாவதி, நான் போய் வண்டி பூட்டச்செய்து அதில் கோவிந்தசாமியை அனுப்பலாம் என்று பார்த்தேன். அதற்குள் அங்கே இருந்து நம்முடைய வண்டிக்காரன் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்துவிட்டான். வண்டி வெற்று வண்டியாக இருந்ததைக் கண்டு நான் நிரம் பவும் கவலையடைந்து, 'அம் மாமார்கள் எங்கடா?' என்று கேட்டேன். அவர்கள் மாரியம்மன் கோவிலிலேயே இருந்து விட்டார்களாம். இன்று காலையில் அம்மனுக்கு அர்ச்சனை செய்த காலத்தில் கோவில் குருக்கள் அண்ணியினுடைய கண்ணைப் பார்த்தாராம். அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் அபிஷேகம் நடக்கும்போது, கோமுகையிலிருந்து வரும் அபிஷேகஜலத்தை எடுத்து மூன்று தினங்களுக்குக் கண்ணில் விட்டு அலம்பிக் கொண்டு மூன்று ராத்திரி கோவிலிலேயே படுத்திருந்தால், கண்ணிலுள்ள பூகரைந்து போகும் என்று அவர் சொன்னாராம்.