பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 பூர்ணசந்திரோதயம்-3 ஆகையால், இந்த மூன்று தினங்களும் அங்கேயே இருந்து நாலாம் நாள் வருவதாகச் சொல்லி அவர்கள் வண்டிக்காரனை அனுப்பிவிட்டார்களாம். அவன் மறுபடியும் நாலாவது நாள் போய் அழைத்துக்கொண்டு வரவேண்டுமாம். அம்மன் கோவில் நிரம்பவும் விஸ்தாரமான கோயில். உள்ளே செளக் கண்டியென்று அழகான ஒரு சிறிய உத்யானவனம் இருக்கிறதாம். அதற்குள் இவர்கள் எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் செளகரியமாக இருக்கலாம். அங்கே தான் இவர்கள் இறங்கி இருக்கிறார்களாம்" என்றாள். அதைக்கேட்ட ஜெமீந்தார், 'ஓகோ அப்படியா சங்கதி! ஆனால் இருந்துவிட்டு வரட்டும். அவர்களுக்குத் துணையாக யார் யார் கூட இருக்கிறார்கள்?' என்றார். லீலாவதி, 'நாலு தாதிகளும், ஆறு சேவகர்களும் கூடப் போயிருக்கிறார்கள். ஆனால், மூன்று தினங்களுக்கு வேண்டிய சாப்பாட்டு சாமான்கள் தான் வேண்டியிருக்கும் ' என்றாள். ஜெமீந்தார் 'அதற்கென்ன பிரமாதம்; பொழுது விடிந்தவுடனே அவர்களுக்கு வேண்டிய சாமான்கள் காய்கறி வகைகளை எல்லாம் ஒரு வண்டியில் வைத்துக்கொண்டு நானே நேரில் போய், எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு ஷண்முகவடிவு வந்திருக்கும் சமாசாரத்தை கமலத்தினிடம் சொல்லிவிட்டு வருகிறேன். கூடுமானால், அவளையும் என்னோடுகூட அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்' என்றார். உடனே அம்மணிபாயி, "ஐயோ பாவம் ஷண்முகவடிவு தன்னுடைய அக்காளைப் பார்க்கவேண்டும் என்று நிரம்பவும் ஆவலோடு வந்தாள்; இன்னும் மூன்று தினங்கள் வரையில் அவளைப் பார்க்காமல் இருக்கும்படி நேர்ந்துவிட்டதே! ஐயா சொல்லும் படி செய்தால்தான், ஷண்முகவடிவின் மனம் திருப்திபடும். எல்லாவற்றிற்கும் கமலத்தை மாத்திரம் நாளைய தினம் அங்கே இருந்து அழைத்துக்கொண்டு வந்துவிடுவதுதான்