பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3 : 9 உன் முகம் அடிக்கடி ஒருவிதமாக மாறுபடுகிறது? இந்த இடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது? நீ உன்னுடைய ஊரிலிருக்கும்போது தான் நீ வேண்டிய அளவு துயரங்களை அனுபவிக்க நேர்ந்ததே, வந்த இடத்திலாவது சகலமான கவலைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கக் கூடாதா? இவ்விடத்தில் நீ காலால் இடும் வேலையைத் தலையால் செய்யக்கூடிய பணிமக்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். எடுக்க எடுக்கக் குறையாத மலைபோன்ற திரவியமும், ஆடை ஆபரணங்களும் இவ்விடத்தில் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் நீயும் உன் அக்காளும் சுயேச்சையாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம். சகலமான சுக செளகரியங் களையும் செய்து கொண்டு நீ தேவேந்திரலோகத்தில் இருப்பவள்போல இவ்விடத்தில் இருக்கலாம். அப்படியிருக்க, நீ ஏன் இப்படி எதையோ நினைத்து, நினைத்து துக்கத்தையும் கவலையையும் வருவித்து மனசைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய் ' என்று நயமாகவும் உருக்கமாகவும் கூறினாள். அதைக்கேட்ட ஷண்முகவடிவு மட்டற்ற மனக்கிலேசம் அடைந்தவளாப், "ஆகா! நீங்கள் சொல்வதற்கு நான் என்னவிதமான பதில் சொல்வதென்பது தெரியவில்லை. நான் ஏற்கெனவே என்னுடைய வரலாறுகளையெல்லாம் சொல்லி இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்வது என் மனசுக்குச் சம்மதியாக இல்லை. எனக்கு நேரிட்ட பெருத்த அவகேட்டை நான் உங்களிடம் வெளியிட்டிருக்கிறேன். அப்படியிருக்க, இனி எனக்கு இந்த ஜென்மத்தில் சந்தோஷம் என்பது உண்டாகப் போகிறதா? அது ஒருநாளும் இல்லை. என்னை நீங்கள் குபேர சம்பத்திலும் சுவர்க்க போகத்திலும் கொண்டுபோய் வைத்தாலும்கூட என் மனம் சந்தோஷம் என்பதைக் காணப் போகிறதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் என்துயரம் மாறப்போகிறதில்லை” என்றாள். go.4.11-23