பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பூர்ணசந்திரோதயம்-3 ஒருநாளும் பலியாது என்பது நிச்சயம். ஏதோ கால வித்தியாசத்தினால், அவருடைய புத்தி மாறுபட்டு, அவர் அப்படிப்பட்ட தகாத காரியத்தில் இறங்கினாலும், அதனால் இனி எனக்கும் அவருக்கும் பாந்தவ் வியம் இல்லாமல் போனாலும், ஒரு தடவை அவரை நாடிய என் மனம் இனி வேறே எந்த மனிதரையும் நாடாது என்ப்து நிச்சயம். என் மனம் நிரம்பவும் புண்பட்டுப் பரிதவிக்கும் இந்தச் சமயத்தில் நீங்கள் மேற்படி சமாசாரத்தைப் பற்றிப் பேசுவதை விட்டு வேறு எதையாவது பேசினால், அது என் மனசுக்கு ஆறுதலாக இருக்கும். பெரியவர் மாரியம்மன் கோவிலிலிருந்து எப்போது திரும்பி வருவார்கள்? கமலத்தையும்கூட அழைத்துக்கொண்டு வருவார்களா? அல்லது, அவள் வர முடியாதிருந்தால், நானாவது நேரில் அங்கேபோய் அவளைப் பார்க்கலாமா? என்றாள். அதைக் கேட்ட லீலாவதி நிரம்பவும் புரளியாகவும், தான் அதிக விவேகமுடைய மேதாவி போலவும் பேசத் தொடங்கி, 'ஷண்முகவடிவு உலகத்தில் பெண்களும் சரி, ஆண்களும் சரி; முதன்முதலாக ஆசைப்படும் மனிதர் தமக்குக் கிடைக்காமல் போனால், அவர்களுடைய மனசில் இப்படித்தான் ஒருவித விரக்தி உண்டாவது வழக்கம். இது கொஞ்சகாலத்தில் விலகிப் போவது நிச்சயம். புதிய மன்ரிதர்களுடைய சிநேகம் ஏற்பட்டபோது பழைய மனிதர்களுடைய ஞாபகம் தானாகவே மறந்துபோகும். இதோ உன் அக்காளுடைய உதாரணத்தையே பார்த்துக்கொள். அவள் இந்த ஊருக்கு வருமுன் உன்னிடத்திலும், உங்கள் அத்தையினிடத்திலும், அவள் அளவற்ற பிரியமுள்ளவளாக இருந்து வந்தாள் அல்லவா? உங்களைவிட்டுப் பிரிந்து வரும்போது அவளுடைய மனசு நிரம்பவும் சஞ்சலமடைந்து வருந்தியது என்று நீயே சொன்னாய் அல்லவா? அவள் இந்த ஊருக்கு வந்து புது மனிதரைக் கண்டவுனே படிப்படியாக உங்களையெல்லாம் மறந்து