பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதேசமித்திரன் 1.6.26-ம் தேதியில் எழுதுகிறது:மதிப்புரை மாயா விநோதப் பரதேசி (சென்னை திருவல்லிக்கேணி கே. விஜயம் கம்பெனியின் சொந்தக்காரரான பூரீமான் வடுவூர் - கே. துரைஸாமி ஐயங்கார் எழுதியது; இரண்டு பாகங் களாய் பைண்டு செய்யப்பட்டது. பூரீமான் வடுவூர் - கே. துரைஸாமி ஐயங்காரைத் தமிழ் உலகம் நன்கறியும்; அவர் ஏற்கெனவே வெளியிட்டுள்ள பல அரிய நாவல்கள் தமிழ் நாட்டினரைப் பரவசப்படுத்தியிருக்கின்றன வென்பதிலையமில்லை. சென்ற ஒரு வருஷகாலமாக மனோரஞ்சனியில் வெளியாகி வந்த மாயா விநோதப் பரதேசியென்னும் நாவலானது சென்ற மாதத்திய இதழுடன் சம்பூரணமடைந்து இப்பொழுது புத்தகரூபமாக விற்பனைக்குத் தயாரா யிருக்கிறது. மேனாடுகளில் பலரும் நம் நாட்டிற் சிலரும் சாசுவதமான நன்மையை விளைவிப்பதில் நாட்டமின்றி, தங்களுடைய நாவல் விலையாகிப் பணம் கைக்கு வரவேண்டுமென்ற ஒரே எண்ணத்துடன் சிதாவுசிதம், யுக்தா யுக்தம் முதலியவைகளைக் கவனியாது படிக்கும்போது மட்டில் ஒருவித இன்பத்தை விளைவிக்கக்கூடியதாகவும், சில சமயங் களிலும் தீய வழிகளிலும் பிரவர்த்தித்துவிடப் படிப்போரைத் தூண்டிவிடக் கூடிய வழியிலும் எழுதியிருப்பதைப் போலில்லாது நமது நூலாசிரியர் தற்காலம் நமது சமூகத்திலிருந்துவரும் குறைகளை உணர்ந்து அவை களைப் பரிகரிக்கும் நோக்கத்துடன் படிப்பவருடைய மனதில் நல்ல வழியான வாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டுமென்ற ஆவல் சுலபமாய் உதிக்கக்கூடிய விதமாய் எளிய நடையிலும் மனதை உருக்கக்கூடிய விதமாகவும் நாவல்களை எழுதி வெளியிட்டு வருவதற்குத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நம் முன்னிருக்கும் இந்த நாவலில் மனித வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வருவது இயல்பென்பதையும், "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்பதையும், 'கெடுவான் கேடு நினைப்பான்” என்பதையும், மேனாட்டுக் கல்வி முறையினாலும் சகவாஸ் தோஷத்தினாலும் ஏற்படக்கூடிய கேடுகள் இன்னவையென்பதையும் ஸத்சங்கத்தால் எவ்விதம், சரீரத்தில் வெகு காலமாக ஊறிப் போயுள்ள கெட்ட வழக்கங்களையும் சுலபமாக விட்டு விடக்கூடியது சாத்தியமென்பதையும், மனிதருடைய புத்தி யுக்தியால் எத்துணை விஷயங்களையும் எவ்விதம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடக் கூடுமென்பதையும் நூலாசிரியர் வெகு அழகாயும், தெள்ளிய நடையிலும் படிக்கப் படிக்க இன்பத்தைக் கொடுக்கக்கூடிய விதமாகவும் வர்ணித் திருக்கிறார். முன்னர் இந்நூலாசிரியர் வெளியிட்டுள்ள திகம்பர சாமியார்