பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31 நடக்க எண்ணுகிறாள் போலிருக்கிறது. இந்த விஷயத்தில் நீங்கள் என்னிடம் என்ன யோசனை கேட்க விரும்புகிறீர்கள்?" என்றான். அவனது சொற்களைக் கேட்டதனம் தனது அழகிய முகத்தை இனிமையாகவும் இளக்கமாகவும் விகசித்துப் பரிதாபகரமாக அவனது முகத்தை உற்று நோக்கி, 'உங்களுடைய கருத்து எவ்வளவு தான் பரோபகாரமானதாகவும் செளரியம் நிரம்பிய தாகவும் இருந்தாலும், நீங்கள் ஊரைவிட்டுப் புறப்பட்ட நேரம் எங்களுக்கெல்லாம் மகா கெடுதலான நேரமென்றே நான் நினைக்கிறேன்' என்று மிக மிக உருக்கமாகவும்துக்ககரமாகவும் கூறினாள். தான் சொன்னதற்குச்சம்பந்தமில்லாத வார்த்தைகளை அவள் பேசியதைக் கேட்டு முற்றிலும் வியப்பும் திகைப்பும் அடைந்த அந்த வீரப்புருஷன் அவளை நோக்கி, “ஏன் தனம்! அப்படிச் சொல்லுகிறாய்? நான் செய்வது உங்களுக்கெல்லாம் அளவற்ற நன்மையைச் செய்யத்தக்க சிரேஷ்டமான காரியமாக இருக்க, அதை நீ கெடுதலாக எண்ணவேண்டிய காரணமென்ன? என்றான். உடனே தனம் காமவிகாரத்தினால் தவிப்பவள் போலத் தத்தளித்துத் தனது கருத்தை வெளியிட நாணுகிறவள்போல நடித்து அவனை நோக்கி இறைஞ்சிய குரலாகப் பேசத் தொடங்கி, நான் சொல்வதைக் கடைசிவரையில் நீங்கள் பொறுமையோடு கேட்க வேண்டுகிறேன். நீங்கள் எங்களுக்குச் செய்வது நிகரற்ற பேருபகாரம் என்பதைப் பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப் பற்றி நாங்கள் அளவற்ற சந்தோஷமும் நன்றியறிதலும் கொண்டிருக்கிறோம் என்பது நிச்சயம். இருந்தாலும் என் விஷயத்தில், நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு பெருத்த தீமை செய்துவிட்டீர்கள். உங்களை நான் என்றைய தினம் கண்டேனோ, அது முதல் என்னுடைய மனசின் நல்ல நிலைமையை நீங்கள் கெடுத்து, go.III-3