பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பூர்ணசந்திரோதயம்-3 தாவாவைச் செய்திருக்கக் கூடும் என்று அவன் நினைத்துப் பார்த்ததெல்லாம் பயனற்றுப்போயிற்று. முரட்டு மனிதர்களான அந்தப் போலீஸ் சிப்பந்திகளிடம் தான் வீண் வாக்குவாதம் செய்து சஞ்சலப்பட்டுக் கொண்டு இருப்பதைவிட உடனே புறப்பட்டு நேராகக் கமிஷனரது கச்சேரிக்குப்போய் விஷயத்தைத் தெரிந்து கொள்வதே உசிதமான காரியமென்று தீர்மானித்துக் கொண்ட நமது யெளவன வீரன் அதற்குமேல் எவ்வித ஆட்சேபமும் செய்யாமல், "சரி; நான் வருகிறேன். கமிஷனரிடம் போவோம் வாரும்' என்று கூற, அந்த அதிகாரி அவனை அழைத்துக்கொண்டு வெளியில் நடக்கலானான். பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த நான்கு போலீஸ் ஜவான்களும் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டனர். உடனே அவர்கள் எல்லாரும் மேலே நடந்து சென்றனர். அவர்கள் இரண்டொரு வீதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது ஆகையால், அதற்குச் சிறிது காலதாமதம் ஆயிற்று. கோடானு கோடி எண்ணங்களால் கலவரம் அடைந்தவனாய்ச் சென்ற கலியாணசுந்தரம், என்ன கருத்தோடு தன்னைப் போலீஸ் கமிஷனர் அழைக்கிறார் என்ற விஷயத்தை இன்னம் சிறிது தெளிவாக அறிந்து கொள்ள முயன்றான். அவனை அழைத்துச் சென்ற அதிகாரி நிரம் பவும் கபட குணமுள்ள மனிதனாகையால், கலியாணசுந்தரத்தின் சந்தேகம் சிறிதளவும் தீராவிதமாய் நிரம்பவும் எச்சரிப்பாகவே மறுமொழி கூறியவண்ணம் நடந்தான். ஆகவே கலியாண சுந்தரத்தின்மனஇருள் அகலாமல் முன்போலவேயே இருந்தது. அவ்வாறு அரைநாழிகை நேரம் கழிந்தது. அவர்கள்போலீஸ் கமிஷனரினது கச்சேரியை அடைந்தனர். அது பழையகாலத்துக் கருங்கல் கட்டிடம். ஆதலால், அதன் வெளித் தோற்றமே நிரம் பவும் பயங்கரமாக இருந்தது. அந்தக் கச்சேரியினது வாசலில் கத்தி துப்பாக்கிகளுடன் பாராக்காரர்கள் காவல் காத்து நின்றிருந்தனர். கலியாணசுந்தரம் அவனை அழைத்துவந்த