பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்-3 அப்போது வழக்கப்படி அவனுக்குத் தேவையான காலை உணவை எடுத்துக்கொண்டு வந்த ஜவானைப் பார்த்து நமது கலியாணசுந்தரம் அவனோடு நயமாகப் பேசத் தொடங்கி, "ஏன் ஐயா! இந்தக் கட்டிடத்தில் என்னைத்தவிர இன்னம், பல கைதிகள் அடைபட்டிருக்கிறார்களா?' என்று கேட்க, உடனே, 'அந்தச் சங்கதி எனக்குத் தெரியாது' என்று அந்த ஜவான் சுருக்கமான மறுமொழி கூறிவிட்டான். அதைக் கேட்ட கலியாணசுந்தரம் கொஞ்சமும் இரக்கம் என்பதே இல்லாத முரட்டு மனிதனான அந்த ஜவானிடத்தில் தான் அந்த விஷயத்தைக் கேட்டதே தவறு என்று நினைத்துத் தன்னைத் தானே கண்டித்துக்கொண்டான். அந்த ஜவானுக்குப் பின்னால், அந்த இடத்தைப் பெருக்கும் வேலைக்காரக் கிழவியும் வழக்கப்படி வந்து தரையைச் சுத்தி செய்யத் தொடங்கினாள். உடனே கலியாணசுந்தரம் ஒவ்வொரு நாளும் செய்வது போல, அந்த அறையைவிட்டு வெளியில் வந்து தாழ் வாரத்தில் உலாவத் தொடங்கினான். அந்தத் தாழ்வாரம் இருண்டிருந்தது என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அதற்குமுன் கலியான சுந்தரம் தனது மனவேதனைகளில் ஆழ்ந்து மெய்மறந்திருப்பது வழக்கமாதலால், பக்கத்தில் அறைகள் இருந்ததைக் கவனித்துப் பார்க்கவே இல்லை. ஆனால், இன்றையதினம், அவன் ஒசை உண்டான பக்கத்தைக் கவனித்துப் பார்த்துக்கொண்டே நடக்க, தனது அறையைப் போலப் பல அறைகள் வரிசையாக இருந்ததையும், அவற்றின் கதவுகள் தாழ்வாரத்துப் பக்கத்தில் பூட்டப்பட்டிருந்ததையும் அவன் கண்டான். உடனே அவன் மெதுவாக நடந்து ஒசை உண்டான அறையின் கதவண்டை போய்நின்று, உட்புறத்தில் 64 ஏதேனும் ஓசை உண்டாகிறதோ என்று கவனித்துப் பார்த்தான். உட்புறம் நிசப்தமாக இருந்தது. அதன்பிறகு சில நிமிஷத்தில் வேலைக்காரி வெளியில் வந்த தனது வேலை முடிந்துவிட்டது என்று கூறினாள். அது கலியாண சுந்தரத்தை மறுபடியும் உள்ளே அனுப்புவதற்காகச்