பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பூர்ணசந்திரோதயம்-3 அடைத்து வைத்துவிட்டார். நான் சுமார் இருபது நாட்களாகவே இங்கே இருந்து வருகிறேன். எனக்கு நேர்ந்த இத்தனை துன்பங்களுக்கும் என்னுடைய முகமே காரணமாக இருந்தது. ஆகையால், நான் என்னுடைய ஆத்திரத்திலும் துக்கத்திலும் என்ன செய்தேன் என்றால், இனி எந்த மனிதருக்கும் என்னுடைய முகத்தைக் காட்டக் கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்டு, உடனே முகமூடியால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். என்னுடைய முகத்தைப் பார்த்து அதன் அழகுக்காக மாத்திரம் என்னை விரும்பாமல், என்னுடைய குணங்களை மாத்திரம் கண்டு என்மேல் பிரியம் கொள்ளும் உத்தம புருஷர் எவராகிலும் அகப்படுவாரானால், அவருக்கு மாத்திரம் என் முகத்தைத் திறந்துகாட்டி, என் பிரியத்தையும் அவர்மேல் வைக்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான தீர்மானம். அவ்வளவுதான் என்னுடைய வரலாறு; அதுபோகட்டும். நமக்கு நேரமாகிறது. நாம் தப்பித்துப் போவதற்கான முயற்சியைச் செய்வோம்' என்றாள். அவளது வரலாற்றைக் கேட்ட நமது கலியாணசுந்தரத்தின் மனம் கொதிப்பும் விசனமும் அடைந்தது. அந்த நகரத்தின் போலீஸ் கமிஷனர் எதற்கும் பின்வாங்காத அயோக்கிய சிகாமணி என்ற எண்ணம்கொண்ட நமது யெளவனப் புருஷன் அவளிடம் நிரம் பவும் இரக்கமடைந்து, 'பெண்ணே! உன்னுடைய வரலாற்றைக் கேட்க, என் மனம் நிரம் பவும் சங்கடப்படுகிறது. இப்படிப்பட்ட அயோக்கிய மனிதனுக்கு இந்த ராஜ்யத்தில் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள உத்தியோக பதவி கிடைத்திருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உன் விஷயத்தில் நான் என்னால் ஆன உதவியைச் செய்து உன்னைத் தப்ப வைக்கிறேன். அதனால், என்னுடைய உயிர் போவதானாலும் கவலையில்லை. நீ இந்த அறைக்கு வந்த கருத்தென்ன? இதிலிருந்து நாம் எப்படித் தப்பிப் போகிறது? உன்னுடைய யோசனை என்னவென்று வெளியிடு' என்றான்.