பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 உடனே கலியாணசுந்தரம் தனது கையிலிருந்த விளக்கை அணைத்துவிடவே, அந்த அறை முழுதும் இருளில் மூழ்கிப் போய் விட்டது. அடுத்த நிமிஷத்தில் பாராக் காரன் தாழ்வாரத்திற்கு வந்து, திறந்து வைக்கப்பட்டிருந்த ஜன்னலண்டை நின்று, அடே பதினைந்தா நம்பர்! ஏன் ஜன்னலைத் திறந்தாய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு எதைப் பார்த்தாய்?" என்றான். உடனே கலியாணசுந்தரம் நயமாகப் பேசத் தொடங்கி, 'ஐயா கோபித்துக் கொள்ள வேண்டாம். உம்முடைய உத்தரவுப்படி இதோ விளக்கை அனைத்துவிட்டேன். ஜன்னல் கதவையும் மூடி விடுகிறேன்' என்று கூற, பாராக்காரன் சாந்தமடைந்து, "சரி; மூடிவிட்டுப் படுத்துக்கொள்' என்று அதட்டலாகக் கூறிவிட்டு அப்பால் நகர, உடனே கலியான சுந்தரம் ஜன்னலண்டை போய், அதன் கதவை மூடித் தாளிட்டுக் கொண்டான். உடனே பாராக்காரன் படிகளின் வழியாகக் கீழே இறங்கிச் சென்ற ஓசை உண்டாகிச் சிறிது நேரத்தில் அடங்கிப் போயிற்று. . - ஒரே அந்தகாரமாக இருந்த அந்த அறைக்குள், தான் அந்த யெளவனப் பெண்ணோடு தனியாக இருந்தது, கலியான, சுந்தரத்திற்கு நிரம் பவும் லஜ் ஜையாகவும் சங்கடமாகவும் இருந்தது. பெரும்பாலோரான புருஷர்கள் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்ந்ததைப் பற்றி ஆனந்தம் அடைவார்கள். ஆனாலும் மகா பரிசுத்த புருஷனான நமது கலியான சுந்தரம் அதைப்பற்றி அளவற்ற வேதனை அடைந்து தத்தளித்தவனாய் அந்தப் பெண்னை நோக்கி, 'பெண்ணே நான் என்னைப் பற்றிக் கொஞ்சமும் விசனப்படவில்லை. உன் விஷயந்தான் என் மனசை நிரம்பவும் வதைக்கிறது. இரண்டு தினங்களாக எவ்வளவோ பாடுபட்டு நீ இவ்விடத்துக்கு வந்தாய்; கடைசியில் நாம் பார்க்காத இந்த இடையூறு குறுக்கிட்டிருக்கிறதே! நாம் இப்போது என்ன செய்கிறது?" என்றான். -