பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பூர்ணசந்திரோதயம்-3 இப்போது உன்னுடைய வரலாற்றைக் கேட்பது, உன் மனசை அநாவசியமாகப் புண்படுத்த வேண்டுமென்ற எண்ணத் தோடு அல்ல. மகா துஷ் டனான உன் புருஷனுடைய கொடுங் கோன்மையிலிருந்து உன்னைத் தப்பவைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தோடு நான் உன்னுடைய ரகசியங்களை அறிந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்' என்று கூறினார். அவரது வாத்சல்யம் ததும்பிய சொற்களைக் கேட்ட லீலாவதி ஒருவாறு மனோதிடமும் சஞ்சலக் குறைவும் அடைந்தாள். ஆனாலும், முற்றிலும் தளர்வடைந்தவளாய், 'அப்பா என்னுடைய வரலாற்றை நான் வாயில் வைத்து உங்களிடம் சொல்லவும் வேண்டுமா? என்னைவிட அதிகமாக அழிந்துபோனவளும், கெட்டுப்போனவளும், துன்மார்க்கத்தில் இறங்கியவளும் வேறே யாரும் இருக்க மாட்டாள் என்பதை நீங்கள் நிதர்சனமாகக் கண்டு கொண்டீர்கள். இப்படிப்பட்ட இழிவும் மானக்கேடும் அடைந்தபின் நான் உயிர்சுமந்து இனி வாழக் கூட வேண்டுமா? நீங்கள் உடனே உயிரைக் கொல்லக்கூடிய விஷம் கொஞ்சம் தருவித்துக் கொடுத்தால் நான் இப்போதே சாப்பிட்டு இவ்விடத்திலேயே உயிரை விட்டு விடுகிறேன். நான் பெண்ணாகப் பிறந்து உலகத்தி லிருந்து இதுவரையில் அனுபவித்த சுகம் போதுமானது. இனி ஒரு நொடி நேரமாவது எனக்கு இந்த உலகத்தில் இருக்கப் பிடிக்கவில்லை" என்று நிரம்பவும் கலக்கமாகவும் பரிதாபகர மாகவும் இறைஞ்சிக் கூறித் தனது கைகளைப் பிசைந்து கொண்டாள். ஜெமீந்தார் முன்னிலும் பன்மடங்கு அதிக வாஞ்சையும் உருக்கமும் தோற்றுவித்தவராய் அவளை நோக்கி, "குழந்தாய் லீலாவதி பதறாதே; உன்னுடைய மனசைச்சமாதானப்படுத்திக் கொள். இப்போது ஒன்றும் முழுகிப் போகவில்லை. நல்லவேளையாக நீயும் நானும் தானே சந்தித்தோம்; வேறே அன்னிய புருஷனோடு உனக்குச் சந்திப்பு ஏற்பட்டிருந்தால், அது