பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பூர்ணசந்திரோதயம்-3 ஹேமாபாயின் வீட்டுக்குவந்தது வேறே எவருக்கும் தெரியாது. ஆகையால், உன்னைப் பற்றி இழிவாகவாவது தூஷணையாக வாவது பேசக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஆகையால், நடந்துபோன விஷயத்தை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்பப் பேசி நாம் அநாவசியமான சங்கடத்தை ஏன் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்? போனதை யெல்லாம் விட்டு, இனி நடக்க வேண்டியதைப் பற்றி நாம் பேசவேண்டும். அதற்குமுன் நான் உன்னுடைய அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அறிந்துகொள்ளப் பிரியப்படுகிறேன், ஆகையால், நீ வீண் காலஹரணம் செய்யாமல் சங்கதியைச் சொல்' என்று வற்புறுத்திக் கூறினார். உடனே லீலாவதி மறுபடியும் விரக்தியாகவே பேசத் தொடங்கி, 'அப்பா! நான் என்ன சங்கதியை எடுத்துச் சொல்லப்போகிறேன்? என் மனம் முழுதும் குழம்பிப்போய் விட்டது. ஆகையால், எதைச் சொல்வது என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஒவ்வொரு விஷயமாகக் கேட்டால், நான் அதற்கு உத்தரம் சொல்லுகிறேன்' என்றாள். அதைக்கேட்ட ஜெமீந்தார் சிறிது நேரம் தயங்கினார். தாம் வாயில் வைத்துப் பிரஸ்தாபிக்கத் தகாத அந்த விஷயங்களை எல்லாம் தாம் அவளிடத்தில் எப்படிக் கேட்பது என்ற ஒருவிதக் கிலேசமும் சஞ்சலமும் தோன்றியது. ஆனாலும், அவர் ஒருவாறு மறைத்துப் பேச நினைத்து, "சரி; அப்படியே ஆகட்டும், நான் கேட்பதற்கு நீ சரியான மறுமொழி சொல்லிக் கொண்டுவா. முன்னொரு நாள் நடு இரவில் நாங்கள் அம்மன் பேட்டையிலிருந்து வந்துகொண்டிருந்த காலத்தில் சில திருடர் எங்களைப் பிடித்து பலவந்தமாக மாரியம்மன் கோயிலிலுள்ள உங்கள் ஜாகைக்குக் கொண்டு வந்தார்களே. அன்றைய தினம் பார்சீஜாதி ஸ்திரீ போல அலங்காரம் செய்து கொண்டு வந்தது நீதான் என்று நான் கேள்வியுற்றேன். அது உண்மைதானா? என்ன கருத்தோடு அப்படிச் செய்தது? அன்றைய தினம் நீ