பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பூர்ணசந்திரோதயம் - 4 என்று தேடியலைந்து துக்க சாகரத்தில் ஆழ்ந்துகிடக்கிறார். நீங்கள்தான் அவரைக் கொன்று பங்களாவின் பின்புறத்தில் புதைத்திருக்கிறீர்கள் என்று நான் அவருக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதிப் போட்டு அந்த விஷயத்தில் நானும் சாட்சி சொல்வேனானால், உங்களுடைய மானமும் போய்விடும்; பிராணனும் போய் விடும். அதுவும் அல்லாமல், நீங்கள் பார்சீஜாதிப் பெண்போல வேஷம் போட்டு இளவரசரை ஏமாற்றிய விஷயத்தையும் ஊரெல்லோரும் அறியும் படி பகிரங்கப்படுத்தி விடுவேன். இதெல்லாம் உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் எனக்கு எவ்வித உதவியும் செய்ய வேண்டியதில்லை. நான் உடனே செலவு பெற்றுக்கொண்டு வெளியில்போய் விடுகிறேன்’ என்றான்.

அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட லீலாவதியினது உடம்பு அச்சத்தினால் கிடுகிடென்று ஆடியது. மூளை குழம்பியது; அறிவு தளர்ந்தது. தான்.அந்த முரட்டு மனிதனைப் பகைத்துக் கொண்டால், அவன் சொன்னபடியே செய்யத் தகுந்தவன் என்பதும் தெரிந்தது. அவன் பொருட்டு தான் இளவரசரைப் பார்ப்பதும் தனது பெரிய தந்தையிடம் சிபாரிசு செய்வதும் அவளுக்குச் சம்மதப்படவில்லை ஆகையால், அவள் அவனை எப்படி சமாதானப்படுத்தலாம் என்று சிந்தனை செய்து கொண்டிருக்க அப்போது ஒரு வேலைக்காரி கதவண்டை வந்துநின்று, ‘அம்மா! வாசலில் யாரோ ஒர் உத்தியோகஸ்தர் வந்திருக்கிறார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராம்! உங்களிடம் அவசரமாகப் பேசவேண்டுமாம்; வெளியில் காத்திருக்கிறார்: என்றாள்.

சிறிதும் எதிர்பாராத அந்த விபரீதச் செய்தியைக் கேட்ட லீலாவதி, கட்டாரித்தேவன் ஆகிய இருவரும் திடுக் கிட்டு நடுநடுங்கினர். தன்னிடம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு என்ன அலுவல் இருக்கப் போகிறது என்ற ஐயமும் அச்சமும் தோன்றி லீலாவதியின் மனதைக் கலக்கின. அவர் ஒருவேளை கட்டாரித்