பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5 நடக்கமாட்டார் ஆகையால், நீங்கள் சொல்வதை நான் ஒருநாளும் நம்பமுடியாது. எனக்கு எவ்வித உதவியும் செய்ய உங்களுக்கு இஷ்டமில்லை என்றே நான் எண்ணிக் கொள்ள வேண்டும். எப்படியாவது எனக்கு நீங்கள் இந்த உதவியைச் செய்து வைக்காவிட்டால் நான் உங்களை இலேசில் விடப் போகிறவனல்ல. நீங்களே நேரில் இளவரசரிடம் போய் இதை முடித்தாலும் சரி அல்லது, உங்களுடைய பெரிய தகப்பனாரைக் கொண்டு இதை முடித்தாலும் சரி, இரண்டு வகையில் எப்படியாவது காரியத்தை முடித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்ந்தது. நீங்கள் அப்படிச்செய்யத் தவறினால் அதன்பிறகு நான் என்ன செய்வேன் என்பதை இப்போது வெளியிட எனக்கு இஷ்டமில்லை” என்றான்.

அவனது பயமுறுத்தலான சொற்களைக் கேட்ட லீலாவதி, ‘ஐயா! நீர் கோரும் காரியம் என்னால் ஆகக்கூடியதல்ல. என் உயிர் போவதானாலும் நான் இனி இளவரசருடைய முகத்தில் விழிக்க மாட்டேன். உம்மைப்பற்றி நான் என் பெரிய தகப்பனாரிடம் சொன்னால் அவர் உமக்கு ஒருநாளும் உதவிசெய்ய எண்ணமாட்டார் ஆகையால், நீர் என்னைவிட்டு இந்த விஷயத்தை வேறே யார் மூலமாவது முடித்துக்கொள்ளும். நீர் வீணாக பயமுறுத்திப் பேசுவதில் உபயோகமில்லை. நான் இப்போது என் பெரிய தகப்பனாருடைய சவரrனையில் இருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும் ஆகையால், நீர் பயமுறுத்தி ஒன்றையும் செய்ய முடியாது என்பது நினைவில் இருக்கட்டும்’ என்று முறுக்காகப் பேசினாள்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன் புரளியாகப் பேசத் தொடங்கி, ‘ஓகோ இப்படிப் பேசினால் நான் உங்களைச் சும்மா விட்டுவிடுவேன் என்ற எண்ணமோ அது ஒரு நாளும் பலியாதம் மா வெந்நீர் அண்டாவுக்குள் நீங்கள் வைத்துக் கொன்ற மனிதர் யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; அவருடைய பிள்ளை தம்முடைய தகப்பனாரைக் காணோம்