பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பூர்ணசந்திரோதயம்-4

நீங்கள் என்மேல் அன்புகூர்ந்து அனுப்பிய கடிதம் வரப்பெற்றேன். இந்தச் சிறைச்சாலையில் சதியாலோசனை களும் மோசடிகளும் சகஜமான காரியங்களாக இருப்பதால், எதையும் மனிதர் உடனே நம்புவதற்கில்லை. ஆகையால், மேலே கண்ட கடிதமும் ஏதாவது வஞ்சகச் சூழ்ச்சியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்னவோ என்ற சந்தேகமே என் மனசிலிருந்து வருகிறது. என்னை விடுவிக்க எத்தனிப்போர் இன்னார் என்பதே எனக்குத் தெரியவில்லை. அது எனக்குத் தெரிந்தாலன்றி, உண்மை இன்னது என்பது எனக்கு நிச்சயப் படாது. நானும் துணிந்து என்னுடைய எண்ணத்தை வெளியிட முடியாது. -

அதுநிற்க, இந்தத்தாதி இன்றைய தினந்தான் என்னிடம் வாய் திறந்து பேசினாள். இவளுக்கும் எனக்கும் கொஞ்சமும் பழக்கமே இல்லை. இவள் எப்படிப்பட்டவள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆகையால், எந்த விஷயத்திலும் நீங்கள் உங்களுடைய முன் யோசனையை நன்றாக உபயோகப்படுத்தி

வேலை செய்யுங்கள்.

-என்று கலியாணசுந்தரம் துண்டுக்காகிதத்தில் எழுதி அதை மடித்துத் தனக்கு வந்த உறைக்குள் வைத்து அதன் வாயை சோற்றுப் பருக்கையால் ஒட்டி அவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்கிக்கொண்டு தனது வழக்கப்படி மாலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வெளியில் போய்விட்டாள். கதவும் மூடி வெளிப்புறத்தில் தாளிடப்பட்டது. கலியாணசுந்தரம் அளவற்ற கவலையும் ஆவலும் கொண்டவனாய் நிரம்பவும் வருந்தி அன்றைய பகல் பொழுதைக் கழித்தான். அந்தத் தாதி சொன்ன வரலாறு முழுதும் கட்டுப்பாடான மோசமாய் இருக்குமோ, அல்லது, உண்மையாக இருக்குமோ என்றும், உண்மையாக இருக்குமானால், தனக்கு உதவி செய்ய வந்திருப்பவர்கள் யாராக இருப்பார்கள் என்றும், அவன் பலவாறு சந்தேகமுற்று வதைபட்டவனாய் அவள் எப்போது