பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பூர்ணசந்திரோதயம்-4 கொள்ளாமல் வீடு முழுவதையும் சோதித்துப் பார்த்தாலும் பார்ப்பார் ஆகையால், நீர் இப்படியே பின்பக்கமாகப் போவீரானால் தோட்டம் இருக்கிறது. அதற்குள் புகுந்து மதிலின் மேலேறி அப்பால் குதித்து ஒடிப்போய் விடும்; கொஞ்சமும் இவ்விடத்தில் தாமதிக்க வேண்டாம் ‘ என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுக் கூடத்தை நோக்கி நடந்துவந்தாள். போலீஸ் அதிகாரிகளைக் கண்டால், எவ்விதக் குற்றமும் செய்யாதவருக்குக்கூட ஒருவித அச்சமும் கலக்கமும் உண்டாவது இயற் கையென்றால், பலவிதத் தவறுகள் செய்தவளான லீலாவதியினது மனம் எப்பாடு பட்டிருக்கும் என்பதைச் சொல்வது மிகையாகும். ஆனாலும், அவள் தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்த கூடத்தை அடைந்து நாணத்தோடு ஒரு பக்கமாக ஒதுங்கிநின்று, ‘ஐயா! நீங்கள் என்னிடத்தில் பேச விரும்புகி றீர்களா? அல்லது, என் பெரிய தகப்பனாரிடத்தில் ப்ேசவிரும்புகிறீர்களா? நீங்கள் மாரியம்மன் கோவிலுக்கு வந்து என் வீட்டுக்காரரைப் பிடித்துக்கொண்டு போய் அநியாயமான தண்டனைக்கு ஆளாக்கினர்கள். இப்போது மறுபடியும் என்ன கருத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை’ என்றாள்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் நிரம்பவும் மரியாதையாகவும் விநயமாகவும் பேசத்தொடங்கி, “அம்மா! நான் உங்கள் பெரிய தகப்பனாரிடத்தில் பேச வரவில்லை. உங்களிடத்தில் ஒரு சிறிய விஷயத்தைப் பற்றிப் பேசிவிட்டுப் போகவே வந்தேன். ஆனால், இப்போது நான் வந்தது உங்களுக்காவது வேறே எவருக்காவது எவ்விதக் கெடுதலையும் உத்தேசித்து வந்ததல்ல. உங்கள் புருஷருக்குத் தண்டனை ஏற்பட்டதைப் பற்றி உங்களுக்குப் போலீசார் மேல் அளவற்ற கோபமும் அருவருப்பும் உண்டாவது இயற்கைதான். ஆனால், அந்த விஷயத்தில் உண்மை இன்னது என்பதைக் கவனித்துப்