பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பூர்ணசந்திரோதயம்-4 ஆவலே முதலில் உண்டானது. ஆகையால், அவன் அதன் அடியிலிருந்த கையெழுத்தைப் பார்த்தான். அடியில் போலீஸ் கமிஷனரின் கையெழுத்து காணப்பட்டது. அதைக் கண்டவுடனே அவனது குழப்பம் முன்னிலும் பன் மடங்கு அதிகரித்தது. அந்தக் கடிதத்தை அவன் உடனே படிக்க ஆரம்பித்தான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

ஐயா! நான் நேற்று நேரில் வந்து உம்மிடம் பேசிவிட்டுப் போனது உமக்கு நன்றாக நினைவிருக்கலாம். அப்போது நான் செய்து விட்டுவந்த பிரஸ்தாபங்களைப் பற்றி நீர் நேற்று இரவெல்லாம் நன்றாக யோசனை செய்திருப்பீர் என்று நம்புகிறேன். நீர் இன்னமும் அதே முடிவோடு இருக்கிறீரா, அல்லது நான் சொன்னதற்கு இணங்கிவர உத்தேசித்திருக்கிறீரா என்பதை முடிவாக அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். ஆதலால், நான் இந்தக் கடிதத்தை உமக்கு அனுப்பி இருக்கிறேன். நான் சொன்னதற்கு நீர் இணங்குவதாக இருந்தால், நான் தயாரித்து வைத்திருக்கும் ஒப்பந்தத்தை உடனே அனுப்புகிறேன். அதில் நீர் உம்முடைய கையெழுத்துச் செய்து திருப்பி அனுப்புவீரானால் இன்றிரவே உம்மை விடுதலை செய்து அந்தப் பெண் உமக்காகத் தயாரித்து வைத்திருக்கும் செளகரியமான ஜாகையில் கொண்டுபோய் உம்மைச் சேர்த்து விடச் செய்கிறேன். அதன்பிறகு நீர் இந்த ஊரைவிட்டு எங்கேயும் போகாமல் இருக்க வேண்டும். நீர் யாருக்காவது கடிதம் எழுதினால் அதை எங்கள் மூலமாகவே அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால், அதன்பிறகு நாங்கள் உமது ஜோலிக்கே வருவதில்லை. நீர் அந்தப் பெண்ணோடு சுயேச்சையாக இருக்கலாம். இந்தப் பிரரேபணைகளை ஒப்புக் கொள்ள உமக்கு இஷ்டமில்லா விட்டால் நான் சொன்ன ஏற்பாட்டை நிறைவேற்றியே தீருவேன் என்பது கண்டிப்பாக உம்முடைய மனசில் இருக்கட்டும். நீர் எங்களுடைய வழிக்கு வராதபட்சத்தில் நாளையதினம் இரவு சுமார் பதினோரு