பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12C பூர்ணசந்திரோதயம்-4 எங்களிடம் அனுப்பிக் கொண்டிருங்கள். அந்தக் கடிதத்தில், சிறைச்சாலைக்குள் உங்களிடத்தில் கமிஷனர் எப்படி நடந்து கொள்ளுகிறார் என்பது போன்ற சகலமான வரலாறுகளையும் எழுதித் தெரிவித்துக் கொண்டே இருங்கள்; அதுவே போதுமானது. மற்ற விஷயங்களை நாங்கள் கவனித்துக் கொள்ளுகிறோம்.

-என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைக் கலியாணசுந்தரம் படித்து முடித்தவுடன் அவனது மனதில் இருவிதமான எண்ணங்கள் உதித்தன. அந்த மனிதர்கள் எழுதியிருந்தது உண்மை போலவும் இருந்தது; பொய் போலவும் இருந்தது. ஆனால், ஒரு விஷயம் மாத்திரம் திருப்தியை உண்டு பண்ணியது. தான்.அவ்விடத்தை விட்டுத்தப்பிப்போவதற்காகத் தந்திரமான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்ற விஷயம் பிறருக்குத் தெரியாதிருப்பதற்கு அனுகூலமாகத் தானாவது, அவர்களாவது அந்த விஷயத்தைக்கடிதங்களில் எழுதாமலிருக்க நேர்ந்தது நிரம் பவும் திருப்திகரமாக இருந்தது. சிறைச் சாலைக்குள் தன் விஷயத்தில் போலீஸ் கமிஷனர் என்ன விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளுகிறார் என்பதைத்தான் அப்படியே எழுதியனுப்புவது யாருக்காகிலும் தெரிந்தாலும் அதனால் தனக்கு அதிகமான தீங்கு எதுவும் நேரிடாது என்று கலியாணசுந்தரம் எண்ணிக் கொண்டான். ஆனாலும், அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு முக்கியமாக அவனது மனதில் ஒர் எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. மறுநாள் போலீஸ் கமிஷனர் தன்னை அவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்தி பைத்தியக்காரிகள் இருக்கும் வைத்தியசாலைக்குள் கொண்டு போய் அடைக்கப் போகிறார். ஆதலால், வெளியிலுள்ள தனது நண்பர்கள் அதற்குமேல் தனக்கு எவ்வித அனுகூலமும் செய்ய முடியாது என்ற நினைவும், அதனால் ஒருவித ஏக்கமும் உண்டாயின. அவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பின் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து அடியில் வருமாறு கடிதம் எழுதலானான்: