பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - பூர்ணசந்திரோதயம்-4 அசிரத்தை யாகவாவது இருப்போம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கமிஷனர் உங்களை இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப் போவதாகச் சொன்ன ஏற்பாட்டில் ஏதாவது மாறுபாடு, அல்லது காலவேறுபாடு முதலியவை ஏதாவது ஏற்பட்டால் அன்றி, மற்றபடி நீங்கள் இனி எங்களுக்குக் கடிதம் எழுதவேண்டியதில்லை. நாங்களும் உங்களுக்கு இனி கடிதம் எழுதவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை என்றே நினைக்கிறோம். நமக்கு இது காறும் அனுகூலமாக இருந்து கடிதங்கள் எடுத்துவந்த இந்தத் தாதிக்கு நாங்கள் தக்கபடி சன்மானம் செய்துவிட்டோம்.

இங்ஙனம்,

வெளியிலுள்ள நண்பர்கள்.

-என்று எழுதப்பட்டிருந்த சுருக்கமும், பூடகமுமான கடிதத்தைக் கலியாணசுந்தரம் படித்தபின்தான் அன்றைய தினம் மறுபடி கடிதம் அனுப்ப விரும்பவில்லை என்று தாதியிடம் சொல்லி அவளை அனுப்பிவிட்டான்.

அதன்பிறகு அன்றைய தினம் பகல் முழுதிலும் இரவு நெடுநேரம் வரையில் கலியாணசுந்தரம் கட்டிலடங்கா ஆவலும் வேதனையும் அடைந்து சஞ்சலத்தில் ஆழ்ந்து மனமாழ்கிக் கிடந்தான். போலீஸ் கமிஷனர் தன்னை எப்படியும் பைத்தியக்காரிகளின் இடையில் கொண்டுபோய் விட்டுவிடு வார் என்ற அச்சமும் கவலையும் எழுந்து அவனை நரக வேதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தது. ஆகையால், நாழிகை ஏற ஏற அவனது சஞ்சலமும் துன்பமும் விஷம் ஏறுவது போலப் பெருகிக்கொண்டே இருந்தன. இடையில், ஒருவித நம்பிக்கையும் பெருகிக் கொண்டே இருந்தது. வெளியிலிருந்து தனக்குக் கடிதம் எழுதிய நண்பர்கள் ஏதோ தந்திரம் செய்யப் போவதாகக் குறிப்பிட்டிருந்ததிலிருந்து அவர்கள் எப்படியும் தன்னை விடுவிக்க ஏதேனும் முயற்சி செய்வார்கள் என்ற