பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 141 லயித்திருக்கும் தனது பொழுதைப் போக்கி வந்தாள். அவளுக்கு இளவரசரால் எண்ணிறந்த தாதிமார் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், அவள் ஜெகன்மோகன விலாசத்தில் வைத்திருந்த தனது அந்தரங்கமான பணிப்பெண்கள் இருவரையும் அடிக்கடி அழைத்துத் தனது ரகசியமான உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தாள். சாமளராவ் அவளது அந்தரங்கக் காரியதரிசி உத்தியோகத்தைப் பார்த்து வருகிறான் என்று ஜனங்கள் எல்லோரும் நம்பி இருந்தார்கள் ஆதலால், அவன் மாத்திரம் அப்போதைக்கப்போது அவளது அந்தப்புரத்திற்குள் போய்த் தனியாக அவளிடம் பேசிவிட்டு வந்துகொண்டிருந்தான். அவனைத் தவிர வேறு ஆண்பிள்ளைகள் எவருமே அவளது மாடத்திற்கு அருகிலும் போகக் கூடாது என்று இளவரசர் கண்டிப்பான கட்டளை பிறப்பித்திருந்தார். ஆதலால் அவளது அந்தப்புரத்தில் ஆண்வாடையே வீசாமல் இருந்து வந்தது.

அந்த வசீகரப் பெண்பாவை ஜெகன்மோகன விலாசத்தை விட்டு அந்த உப்பரிகைக்கு வந்தபிறகு சரியாக இரண்டு மாத காலம் கழிந்தது. அடுத்த நாள் மாலை ஏழரை மணி நேரமாயிற்று. பெளர்ணமிச்சந்திரன் தனது முழுவடிவத்தையும் சம்பூர்ணமான அழகையும் தோற்றுவித்து மகா உன்னதமாக உயர எழுந்து பால் போன்ற ரமணியமான நிலவைப் பரப்பித் தனது அமிர்த கிரணங்களை அள்ளி அள்ளி மெதுவாகத் தூவிக் கொண்டிருந்தான். தென்றல் காற்று அப்போது நெகிழ்ந்து நகைத்த மல்லிகை, முல்லை, ரோஜா, செண்பகம் முதலிய மலர்களினின்றும் வெளிப்பட்ட அதி மனோக்கியமான மணத்தையும் தண்மாமதியத்தின் அமிர்தரச ஊற்றையும் ஏற்று ஜிலுஜிலென்று எங்கும் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. குயிலினங்களும், இதர பறவையினங்களும் அன்றைய பகல் முழுதும் தின்று செருக்கிப் போய் மட்டற்ற களி கொண்டு துள்ளிக் குதித்து சங்கீத கோஷம் செய்தன. ஆதலால் அப்போதைய இயற்கைக் காட்சி ஐம் புலன்களையும்