பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j A.C. பூர்ணசந்திரோதயம் - 4 லிருந்த சகலமான உத்தியோகஸ்தர்களும் சிப் பந்திகளும் அந்த வரலாற்றை உண்மையென்றே நினைத்து பூர்ணசந்தி ரோதயத்தை நிரம்பவும் பூஜிதையாகவும் பெருமையாகவும் மதித்து வந்தனர். இளவரசரது அன்னையான பெரிய மகாராணி மாத்திரம் பூர்ணசந்திரோதயம் யாரோ அன்னிய மனிஷி யென்றும், இளவரசர் தமது பட்டமகிஷியை வெறுத்து விலக்கி இருப்பதால், இவளை மணந்து மனையாட்டி ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர் இவளைக் கொணர்ந்து அவ்வாறு பூஜிதையாக வைத்திருக்கிறார் என்றும் ஒருவாறு தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டிருந்தாள். தனது புத்திரரான இளவரசர் வயது முதிர்ந்த மனிதர் ஆகையால், எந்த விஷயத்திலும் அவரைக் கண்டிப்பதற்காவது, அவருக்கு நற் புத்தி புகட்டுவதற்காவது பெரிய மகாராணி விரும்ப வில்லை. ஆனாலும், அதனால் பூனாதேசத்திலுள்ள தனது மருமகளான பட்டமகிஷிக்கு ஏதேனும் பொல் லாங்கு நேருமோவென்ற கவலைகொண்டு சஞ்சலமுற்றவளாய் எதையும் வெளியிடாமல் மெளனமாக இருந்தே மனமாழ்கி வருந்தலானாள். -

பூர்ணசந்திரோதயமோஎக்காலத்திலும் முதல் தரமான ஆடை ஆபரணங்களை அணிந்து, மனமோகன சிங்கார ரூபிணியாக இருந்து தன்னைக் காண்போரது மனதும் புலன்களும் மயங்கி கலங்கி நெக்குவிட்டுருகி உருக்குலைந்து பாழ்த்துப் போமாறு செய்யத் தகுந்த அற்புத வசீகரம் வாய்ந்தவளாக இருந்தாள். ஆனாலும், அவள் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும், யாரிடத்திலும் பேசாமலும் நிரம்பவும் ஜாக்கிரதையாக இருந்து வந்தாள். தாதியர் தனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தபிறகு அவர்களெல்லோரையும் அப்பால் அனுப்பிவிட்டு ஏகாந்தத்திலிருந்து ஏதோ புஸ்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டும் பிள்ளைகளோடும் கோகிலங்களோடும் இதர

புள்களோடும் மலரினங்களோடும் உறவாடி மனமொன்று பட