பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 1 ஜெமீந்தாரை எனக்குத் தெரியவே தெரியாது. அவர் சில மாச காலமாகக் காணாமல் போய்விட்டார் என்பதை நான் இப்போது தான் நீங்கள் சொன்னதிலிருந்து தெரிந்துகொண்டேன்’ என்றாள்.

இன்ஸ்பெக்டர் ‘அந்த ஜெமீந்தார் காணாமல் போனதற்கும் உங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஆனால் உங்கள் புருஷருக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வேறொன்றுமில்லை’ என்றார்.

அதைக்கேட்ட லீலாவதி நிரம்பவும் ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, “ஆகா இன்னும் நீங்கள் என் புருஷரை விட்டபாடு இல்லையா? அவரைக் குடும்பத்திலிருந்து பிரித்து ஏழுவருஷக் கடினக் காவல் தண்டனை செய்து வைத்ததோடு உங்கள் மனம் திருப்தி அடையவில்லையா? யாரோஒரு ஜெமீந்தார்காணாமல் போய்விட்டால் அதற்கும் என் புருஷருக்கும் என்ன சம்பந்தம்? அவரென்ன பேயா பிசாசா? மனிதரை எல்லாம் அப்படியே விழுங்கி விடுகிறவரா? நீங்கள் சொல்வது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல இருக்கிறதே அன்றி வேறல்ல என்று கடுகடுத்த முகத்தோடு மொழிந்தாள்.

இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிக நயமாகப் பேசத் தொடங்கி, ‘அம்மா! நான் சங்கதி முழுவதையும் சொல்லுமுன் நீங்கள் கோபித்துக் கொள்வது சரியல்ல. உங்கள் புருஷர் விஷயத்தில் நான் அப்படிப்பட்ட குற்றமொன்றும் சுமத்த வரவில்லை. நான் என்னுடைய கருத்தை முற்றிலும் வெளியிடுகிறேன். அதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்பீர்களானால், நீங்கள் இப்படிக் கோபித்துக் கொள்ளவே. மாட்டீர்கள். அதாவது, உங்களுடைய புருஷரைச்சிறைபடுத்திய அன்றையதினம் விடியற்காலையில் ஒர் அநாமதேயக் கடிதம் நியாயாதிபதிக்கு எழுதப்பட்டு, அது அவரால் என்னிடம்