பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பூர்ணசந்திரோதயம் - 4 இரண்டு மாச காலத்தில் நான் அடைந்ததை எல்லாம் ஒன்று சேர்த்தாலும் இதற்கு ஈடு சொல்ல முடியாததாக இருந்தது. கடைசியில் இன்றைய பகலும் ஒழிந்தது. நானும் உன் வாயிதாப் படி உன்னிடம் வந்து சேர்ந்தேன். இனி என் மனக்கவலை ஒழிந்ததென்று சொல்லி எனக்கு அபயஸ்தம் கொடுத்து என்னைக் காப்பாற்றவேண்டியது உன்னைச் சேர்ந்த பொறுப்பு. நீ ஏதோ ருது நூல் என்ற சாஸ்திரத்தைப் படித்ததாகவும், நீயும் அப்படிப்பட்ட கெட்ட நட்சத்திரம் ஒன்றில் புஷ்பவதியாகி இருப்பதாலும், அதில் பத்து மாசகாலம் கழிந்து போனதால், இன்னமும் இரண்டு மாசகாலம் கழியவேண்டும் என்றும், நீ என்னையே பதியாக அடையத் தீர்மானித்து விட்டதாகவும், ஆனது பற்றி இந்த இரண்டு மாசகாலம் வரையில் நான் உன்னிடம் நெருங்கக் கூடாது என்றும் நீ எழுதி இருந்தது நியாயமான சங்கதியாக இருந்தது. ஆகையால், அதற்கு மாறாக நடக்க வேண்டுமென்று நான் பிரியப்படவில்லை. அதைக் கருதியே நான் எத்தனையோ பாடுகள் பட்டு இதுவரையில் இந்தப் பெருந்துன்பத்தைப் பொறுத்திருந்தேன். இனி ஒரு rண நேரமாவது நீயும் நானும் பிரிந்திருக்க முடியாது. நான் உன்னைப் பிரிந்திருப்பது என்னுடைய உயிரே என்னை வெற்றுடம்பாக விட்டுப் பிரிந்து போய் நிற் பதுபோல இருக்கிறது. கண்மணி வா இப்படி இந்த மனநோயை ஒரு நிமிஷமும் என்னால் சகிக்க முடியவில்லை. என் மனம் தாமரை இலைத் தண்ணிர் போலத் தவிக்கிறது. தாமசம் செய்யாதே. இப்படி வந்து என் மடியின் மேல் உட்கார்ந்து கொள்’ என்று அனலிடு மெழுகு போல மிகமிக நைந்திளகிக் கெஞ்சிக் கொஞ்சி கூறினார்.

அவரது கனிவான சொற்களைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அன்னியர்களான ஆண்பிள்ளைகளின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட பதிவிரதா சிரோன்மணியான ஒரு ஸ்திரீ எவ்வாறு ஸ்கிக்க வொண்ணா நாணமும், கிலேசமும், சஞ்சலமும் அடைந்தவளாய்த் தத்தளிப்பாளோ அதுபோல மெதுவாக