பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O பூர்ணசந்திரோதயம்-4 மாறுபட்டுப் பேசுவது கொஞ்சமும் நம்பத் தகாத விஷயமாக இருக்கிறதே! அப்படித்தான் அந்தக் கருடபுராணத்தில் என்ன விசேஷம் சொல்லப்பட்டிருக்கிறது? எதைக் கண்டு நீ இவ்வளவு துரம் பயப்படுகிறாய்?” என்றார்.

பூர்ணசந்திரோதயம், “ஆகா அந்தப் புஸ்தகத்திலுள்ள விஷயங்களை நான் எப்படி எடுத்துச்சொல்வேன் அதை நான் படிக்காமலிருந்தாலும், அது நல்லதாக இருக்கும். ஒருவேளை மகாராஜா அந்தப் புஸ்தகத்தைப் படித்ததுண்டோ இல்லையோ தெரியவில்லை. அதை இதுவரையில் படிக்காமலிருந்தால் இனியும் படிக்காமலிருந்து விடுவது நல்லது. மனிதர் இறந்த பிறகு அவர்களுடைய ஜீவன்கள் எமலோகத்துக்குக் கொண்டு போகப்படுவதும், அவ்விடத்தில் தண்டிக்கப்படுவதுமான விவரங்களை இப்போது நினைத்தால் கூட, பயம் உச்சிமயிரைப் பிடித்து உலுக்குகிறது. இன்னின்ன பாவங்கள் செய்தவர்கள் இன்னவிதமாக தண்டிக்கப்படுவார்கள் என்பதைப் படித்த வுடனே என் மனசில் ஒரு பெருத்த கிலி உண்டாகி விட்டது. அது முதல் என் மனமே அடியோடு மாறிவிட்டது’ என்று நடுநடுங்கிக் கூறினாள்.

இளவரசர், ‘ஓகோ அப்படியா சங்கதி அதைக் கண்டா நீ பயப்படுகிறாய்? எமனுலகில் ஜீவர்கள் அவரவர்கள் செய்த குற்றத்துக்குத் தக்கபடி தண்டிக்கபடுகிறார்கள் என்பது புதிய விஷயமல்லவே! எப்போதும் ஜனங்கள் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயந்தானே. அதைக் கண்டு நீ இப்போது இவ்வளவு பிரமாதமாகப் பயப்படவேண்டிய காரணம் என்ன? மடியில் கனமுள்ளவர்களுக்குத் தானே வழியில் பயம். உனக்கும் எனக்கும் என்ன பயம் இருக்கிறது? நாம் என்ன அப்படிப்பட்ட பெரிய குற்றத்தைச் செய்து விட்டோம். ஒன்றுமில்லையே! நாமென்ன திருடுகிறோமா? கொலை செய்கிறோமா? பிறரை வஞ்சிக்கிறோமா? ஒன்றும் செய்ய வில்லையே. நான் பார்த்தவரையில் நீ ஒர் எறும்புக்குக்