பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - பூர்ணசந்திரோதயம்-4 அவளுக்குரிய சுக செளக்கியங்களுக்காவது ஒரு குறைவும் நான் வைக்கவே இல்லை. சிற் சில சமயங்களில் தன்னுடைய அந்தப்புரத்துக்கு வரும்படி அவள் எனக்குச் செய்தி சொல்லி அனுப்பியதுண்டு; என்னோடு பேசி, என் மனஸ்தாபத்தைத் தீர்க்க முயற்சித்ததும் உண்டு. நான் கொஞ்சமும் இடம் கொடாமல் பிடிவாதமாக இருந்துவிட்டேன். அவ்வளவுதான் எங்களுக்குள் நடந்த சச்சரவு. இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு அவள் எப்படிப்பட்ட விபரீதமான காரியம் செய்து விட்டாள் பார்த்தாயா? நான் அவள் விஷயத்தில் தப்பாக நடந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும், அவள் இப்படிப்பட்ட இழிவானகாரியம் செய்து விட்டாளே. அவளை இனி நான் என் பட்டமகிஷி என்றாவது, சம்சாரம் என்றாவது சொல்லிக் கொள்ள என்மனம் இடங்கொடுக்குமா? இனி அவளோடு நான் சம்சர்க்கம் வைத்துக் கொண்டால், என்னைவிட இழிவான மனிதப் பதர் வேறே யாராவது இருப்பானா? ஆகையால், எனக்கும் அவளுக்கும் உள்ள உறவு இதோடு ஒழிந்து போய் விட்டது என்றே கருதவேண்டும். அவளை இனி நான் என் ஆயுசுகால பரியந்தம் கண்ணால் பார்க்கப் போகிறதுமில்லை. அவள் என் சம்சாரமாக இருந்தவள் என்பதை நான் மனசால் நினைக்கக் கூடப் போகிறதில்லை. இனி அவள் இந்த ஊருக்குத் திரும்பி வரக் கூடாதென்று நான் அவளுடைய தாய் தகப்பன் மாருக்குக் கடிதம் எழுதி அனுப்பத் தீர்மானித்து விட்டேன். இந்தக் கடிதத்தை நான் இன்னம் வேறே யாருக்கும் காட்டவே இல்லை. முதன்முதலாக உனக்குத்தான் காட்டினேன்; நாளைய தினம் காலையில் நான் இதை என் தாயாருக்குக் காட்டி அவர்களுடைய சம்மதியைப் பெற்று நான் முன்னே சொன்னபடி பூனாவுக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிடப் போகிறேன்’ என்றார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் நிரம் பவும் இனிமையாகவும் நயமாகவும் பணிவாகவும் அந்த விஷயத்தில் பெரிதும் கவலை கொண்டு மனப்பூர்வமாகவும் பேசுகிறவள் போலக் காணப்பட்டு, ‘நான் கொஞ்சம் அவசரமாகப்