பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பூர்ணசந்திரோதயம்-4 இருக்கும். இந்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்க மாட்டோம்’ என்றார். -

அந்த வரலாற்றைக் கேட்ட லீலாவதி பெருத்த திகிலும் கலவரமும் அடைந்தவளானாள். பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரைத் தான் கொன்றுவிட்டதாகத் தன்மீது குற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற பெருத்த கிலி அவளது மனதில் உண்டாகிவிட்டது. அதுவுமன்றி, தனது புருஷனைப் பற்றி நியாயாதிபதிக்கு அநாமதேயக் கடிதம் எழுதி அவரைக் காட்டிக் கொடுத்து தண்டனைக்கு ஆளாக்கியதும் வெளிப்பட்டுப் போகுமோ என்ற எண்ணமும் தோன்றியது. அந்தக்கடிதங்களின் ஆதாரத்தை வைத்துக்கொண்டு, போலீஸ் இன்ஸ் பெக்டர் தன்னைச் சிறைப்படுத்தித் தன்மீது கொலைக் குற்றம் சுமத்தினால், தான் அதிலிருந்து தப்பி வெளிவருவது நிரம்பவும் கடினமாகவும் இருக்கும் என்ற நினைவும் உண்டாயிற்று. இன்ஸ் பெக்டர் ஒருவேளை தன்னைப் பிடித்துக்கொண்டு போகும் கருத்தோடு வந்து முதலில் தனது வாக்குமூலத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று அவ்வாறு பாசாங்கு செய்கிறாரோ என்ற யோசனையும் தோன்றியது. அவர் தன்னைக் கைதியாக்கிய பின் கட்டாரித்தேவன் போலீஸ் தொந்தரவி லிருந்து தான் தப்பித்துக்கொள்ள அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து, தன்னை அவர்கள் இனி தொடராமல் விட்டு விடுவதாக எழுதிக் கொடுத்தால், தான் பவானியம் பாள்புரம் ஜெமீந்தாருடைய கொலையை வெளிப்படுத்துவதாக ஒப்புக் கொண்டு, அவருடைய பிணத்தை வெந்நீர் அண்டாவிலிருந்து எடுத்ததையும், தோட்டத்தில் புதைத்ததையும், மற்ற விவரங்களையும் வெளியிட்டு விடுவானாகில், தான் தப்பமுடியாது என்ற நிச்சயமும் ஏற்பட்டது. ஆகையால், தான்மறுபடியும் கட்டாரித்தேவனைக் கண்டு அவனுடன் பேசி, அவன் கேட்டுக் கொண்டபடி அவனுக்கு உதவி செய்வதாக வாக்களித்து வைக்க நேரும்