பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37-வது அதிகாரம் போகுமிடமெல்லாம் பொல்லா விதி

மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையில் ரதிகேளி விலாசத்திலிருந்து தெய்வச் செயலாகத் தப் பிப் படிகளின் வழியாகக் கீழே இறங்கிய நமது ஷண்முகவடிவு அளவற்ற உற்சாகமும் மனோதிடமும் கொண்டவளாய்ப் பல அறைகளையும் கூடங்களையும் கடந்து சந்தடி செய்யாமல் நடந்து அந்த மாளிகை யின் வாசல் இன்னதிக்கிலேதான் இருக்க வேண்டும் என்று தனக்குள் ஒருவிதமாக யூகித்துக்கொண்டு அந்தத் திக்கில் செல்லலானாள். அப்போது இரவு பதினொரு மணி சமயத்திற்கு அதிகம் இருக்கும் ஆதலால், அந்த மாளிகையைச்சார்ந்த வேலைக்காரர்கள் எல்லோரும் அலுத்துத் துயின்று கொண்டி ருந்தனர். ஆதலால், அவர்கள் விடுத்த குறட்டையின் ஒசை ஆங்காங்கு சப்தித்து அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவர்களில் எவனாவது விழித்தெழுந்து தன்னைப் பிடித்துக் கொண்டால், மறுபடி தனக்கு எவ்விதமான பொல்லாங்கு நேருமோ என்று பெரிதும் அஞ்சினவளாய் அந்த மடமங்கை தனது விரல்களைப் பூமியில் ஊன்றியபடி நடந்து சென்றாள். அந்த மாளிகையின் எஜமானரான கிழவரிடத்திலிருந்து தன்னைத் தப்புவிக்க, நல்ல தருணத்தில் ஒரு முரட்டு மனிதன் தோன்றியதும், அதன்பிறகு அந்த முரட்டு மனிதனிடத்திலிருந்து, அதே கிழவர் தன்னைத் தப்ப வைத்தனுப்பியதும், நிரம்பவும் விநோதமான தெய்வீக சம்பவமாகத் தோன்றின. ஆதலால், அவளது மனம் உடனே கடவுளை நினைத்து, பக்திப் பெருக்கினால் உருகியது. தனக்கு அடிக்கடி பயங்கரமான பெருத்த அபாயங்கள் நேர்ந்து கொண்டே இருந்தாலும், தான் இனி தப்பமுடியாது என்று நினைக்கத் தகுந்த மகா சங்கடமான நிலைமையில் ஈசுவரன்