பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19 கொடுப்பது சரியல்ல. நாங்களே இப்போது மாரியம்மன் கோவிலுக்குப் போக உத்தேசித்திருக்கிறோம். உங்களிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் இன்னார் என்பதை நாங்கள் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆகையால், நாங்களே அவர்களிடத்தில் இதைக் காட்டி உண்மையைத் தெரிந்து கொள்ளுகிறோம்; அவர்கள் மூலமாகவும் உண்மையை அறிந்து கொள்ள முடியாவிட்டால், அதன்பிறகு நாங்கள் நேராக இந்த ஊர்ப் பெரிய சிறைச் சாலைக்குப்போய் உங்களுடைய புருஷரையே பார்க்கப் போகிறோம்; பார்த்து அவரிடத்திலேயே இந்த அநாமதேயக் கடிதத்தைக் காட்டி இதை எழுதியது யாரென்று கேட்டால், அவர் உடனே உண்மையைச் சொல்லிவிடுவார். ஏனென்றால், இதை எழுதிய பெண்ணே அவரைக் காட்டிக் கொடுத்து அவர் தண்டனையடையும் படி செய்து வைத்தவள் என்ற சங்கதி அவருக்குத் தெரியுமானால், தாம் எப்படியும் அவளுக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்ற நினைவினால், அவர் உண்மையை உடனே சொல்லிவிடுவார். இந்தப் பெண் யாரென்பதைக் கண்டுபிடிப்பது இனி சுலபமான காரியம் என்றே நினைக்கிறேன். நான் உங்களுக்கு அதிகத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். இனி நீங்கள் போய் உங்களுடைய அலுவலைக் கவனிக்கலாம்” என்று கூறியவண்ணம் தமது கையிலிருந்த அநாமதேயக் கடிதத்தை மடித்து சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார்.

அவரிடத்திலிருந்துதான்.அந்த விபரீதமான கடிதத்தைப் பெற முடியாமல் போய் விட்டதே என்ற கவலையும் ஏக்கமும் திகிலும் கொண்ட லீலாவதி சகிக்க இயலாத துக்கமும் கலக்கமும் அடைந்து தான் என்ன செய்வது என்பதை அறியாதவளாய் அப்படியே மரம் போல நின்றுவிட்டாள். இன்ஸ் பெக்டர் மாரியம்மன் கோவிலுக்குப் போய்த்