பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 229 தனியான ஒர் இடம் கொடுக்கிறோம். அவ்விடத்தில் சுகமாகப் படுத்துத் தூங்கு. பொழுது விடிந்தவுடன் நீ போக வேண்டிய இடத்துக்குப் போகலாம். அல்லது உன்னை யாரோ சிலர் எங்கேயோ ஒரு பெருத்த மாளிகையில் கொண்டு போய் வைத்துக்கொண்டு உன்னைக் கெடுக்க எத்தனித்ததாகச் சொல்லுகிறாயே. அந்த இடத்தை எங்களுக்கு நீ காட்டினால், நாங்கள் அந்த மனிதர்களைப் பிடித்து விசாரணை செய்து தண்டனைக்குக் கொண்டுவருகிறோம்” என்றார்.

அவர் கூறின. அன்பான வார்த்தைகளைக் கேட்ட ஷண்முக வடிவு அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தாள்.அந்த வழக்கிலிருந்து தான் தப்புவது கடினமென்றும், போலீசார் தன்னை இலேசில் விடமாட்டார்களென்றும் தான் எண்ணி இருந்ததற்கு மாறாக அவர்கள் தன்னை அவ்வளவு சுலபத்தில் விட்டு விட்டதையும், அந்த இன்ஸ்பெக்டர் தயாளகுணம் பொருந்தியவராக இருப்பதையும் காண அவளது மனம் அளவற்ற ஆச்சரியத்தை அடைந்தது. அவள்தனது காதுகளையே நம்பாமல் சிறிதுநேரம் நின்றாள். அவளது மனம் ஈசுவரனது திருவருளையே சிந்தித்து நின்றது. அவள் தனது இரு கரங்களையும் எடுத்துக் குவித்து இன்ஸ்பெக்டரை நோக்கி வணங்கி, ‘ஐயா! தங்களைப் பார்க்கும் போது இந்தத் தெய்வத்தையே பார்ப்பதுபோல இருக்கிறது. என் மனம் நிரம் பவும் தைரியமும் நம்பிக்கையும் சந்தோஷமும் அடைகிறது. அநாதையான என் விஷயத்தில் நீங்கள் அனுதாப மும் ஜீவகாருண்யமும் காட்டும் விஷயத்தில் உங்களுக்கு ஈசுவர கடாக்ஷம் பூர்த்தியாக ஏற்படும் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். என்னை வஞ்சித்தவர்கள் இன்னார் என்பதைக் கண்டு அவர்களைத் தண்டனைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நினைவு எனக்குக் கொஞ்சமும் இல்லவே இல்லை. துஷ்டர்களைத் தண்டிக்க ஈசுவரன் இருக்கிறான். அந்தக் கவலை நமக்கு எதற்காக? என்தமக்கை என்னைவிட்டுப்