பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257 சம்சயமே கொள்ளும் படி அவளது மனம் தூண்டியது. ஆகையால், அந்தக் கிழவி நல்லவளோ அல்லது கெட்டவளோ, அந்த இரவு யாதொரு இடரும் இல்லாமல் கழியுமோ கழியாதோ என்று பலவாறு சந்தேகித்தவளாய் இருக்க, கிழவி நடுக்கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போய் வராமல் கதவை மூடிக்கொண்டு போனது அவளது மனதில் ஒருவித சஞ்சலத்தை உண்டு பண்ணியது. ஆனால், அவள் அத்தகைய சந்தேகத்திற்கு அதிகமாக இடங்கொடுக்காமல் அடக்கிக்கொண்டு கிழவியின் வருகையை எதிர்பார்த்தவளாய்த் தனது திருஷ்டியை நாற்புறங்களிலும் செலுத்தி அந்த இடத்தின் அமைப்பு எப்படி இருக்கிறதென்று கவனித்துக்கொண்டிருந்தாள். சுமார் கால் நாழிகை சாவகாசம் கழிந்தது, அப்போதும் கிழவி வரவில்லை. நேராகப் போய்ப் பாய்களை எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவள் அவ்வளவு காலதாமதம் செய்யவேண்டிய காரணமென்ன என்று ஷண்முகவடிவு சிந்திக்கலானாள். அவள் ஒருவேளை தனது தம்பியாகிய சாமியாரை எழுப்பித் தனது வருகையையும் விருத்தாந்தங்களையும் சொல்லிக் கொண்டிப்பாளோ என்ற சந்தேகம் எழுந்தது. இரண்டாங் கட்டில் யாரோ இருவர் நிரம்பவும் தணிவான குரலில் பேசிக்கொண்டதுபோல ஒருவித ஓசை உண்டாயிற்று. “சரி, கிழவிதன்னுடையதம்பியை எழுப்பி அவரிடம் என் விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை அவரே விழித்துக் கொண்டு விசேஷம் என்னவென்று கேட்டிருக்கலாம். என் வரலாற்றைச் சொல்லிவிட்டுத்தான் வரட்டுமே என்று ஷண்முகவடிவு தனக்குள் ஒருவித முடிவு செய்து கொண்டவளாய்க் கீழே உட்கார்ந்திருந்தாள். அவளது பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கு காற்றில் அடிக்கடி அசைந்து அணைந்து போகும் போலிருந்தது. ஷண்முக வடிவு அதைத் தனது கையில் அணைத்துக் கொண்டு நாற்புறங்களிலும் பார்க்க, பக்கத்தி லிருந்த மாடத்தில் ஒரு நெருப்புப்பெட்டி இருக்கக் கண்டு அதை