பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பூர்ணசந்திரோதயம்-4 விடிந்தபின் நீ ஸ்டேஷனுக்குப் போகலாம். நான் இரண்டாங் கட்டுக்குப் போப் உனக்கும் எனக்கும் பாய் தலையணை களெல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறேன். அதுவரையில் நீ இப்படியே இரு. இங்கே இருளாக இருக்கிறது. இந்த விளக்கையும் நான் இவ்விடத்திலேயே வைத்து விட்டுப் போகிறேன்; அதிருக்கட்டும். உன் அக்காளுடைய பெயர்

என்ன?

ஷண்முக: - என் அக்காளுடைய பெயர் கமலம்.

கிழவி:- சரி. நான் போய் இதோ ஒரு rணத்தில் திரும்பி வந்து விடுகிறேன். நீ இங்கேயே இருக்கிறாயா? என்னோடு

கூடவே வருகிறாயா?

ஷ ன் முக:- நான் இங்கேயே இருக்கிறேன். விளக்கை மாத்திரம் இப்படியே வைத்துவிட்டுப் போங்கள். ஆனால் உங்களுக்கு இரண்டாங்கட்டில் வெளிச்சம்வேண்டாமா?

கிழவி:- எனக்கு அங்கே விளக்கு வேண்டியதில்லை. பாய்கள் இருக்குமிடம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், விளக்கில்லாமலேயே நான் போய்ப் பாய்களை எடுத்து வருகிறேன் - என்று கூறியவண்ணம் ஷண்முகவடிவை அவ்விடத்திலேயே உட்கார வைத்துவிட்டு இரண்டாங்கட்டிற்கு துழைந்தவள், இரண்டு கட்டுகளுக்கும் நடுவிலிருந்த கதவை மூடிக்கொண்டு அப்பால் சென்றாள். அவள் அந்தக் கதவைத் திறந்து மூடியகாலத்தில் அதற்கப்பால் இருள் நிரம்பி இருந்ததையும் ஷண்முகவடிவு கவனித்தாள்.

கமலம் திருவாரூரில் தனியாக விட்டு வந்தபிறகு ஷண்முகவடிவிற்கு அந்த ஊரிலும், கோலாப்பூரிலும், தஞ்சாவூரிலும் பற்பல அபாயங்களும் இடர்களும் நேர்ந்தன. ஆதலால், அவளது மனம் எதைக் கண்டாலும் சந்தேகமே கொண்டது. நல்ல மனிதர்கெட்ட மனிதர் என்ற வேறுபாட்டை அவள் அறிந்துகொள்ள மாட்டாமல், எல்லோரிடத்திலும்