பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 255 திரும்பி வரவே இல்லை. அவளைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று நான் இந்த ஊருக்கு வந்தேன்.

கிழவி:- ஆம்; உன்னைப் பார்த்தால் யெளவனப் பருவ ஸ்திரீயாக இருக்கிறாய். நீ தனியாகப் புறப்பட்டு வரவேண்டிய காரணமென்ன? வீட்டில் பெரிய மனிதர்கள் இல்லையா?

ஷண்முக:- எங்களுக்குத தாயுமில்லை. தகப்பனுமில்லை. நானும் என் தமக்கையும்தான் எங்கள் குடும்பத்து மனிதர்கள். பெரிய மனிதர்களும் நாங்கள்தான். சின்னமனிதர்களும் நாங்கள் தான். என் அக்காள் இந்த ஊருக்கு வந்தவள் வெகு காலமாகத் திரும்பி ஊருக்கே வரவில்லை. ஆகையால், அவளைப் பார்த்து ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்ற எண்ணத்தோடு நான் இந்த ஊருக்கு வந்தேன். என் தமக்கை ஒரு விலாசம் கொடுத்திருந்தாள். நான் சிவ மோசக்காரர்களிடம் அகப்பட்டுக்கொண்டேன். அவர்கள் அந்த விலாசத்தைக் காட்டுவதாகச் சொல்லி என்னைக் கொண்டுபோய் வேறு சில மனிதரிடம் விட்டுவிட்டார்கள். அவர்கள் என்னிடம் துராகிருதமான காரியம் செய்ய எத்தனித்தார்கள். நான் தெய்வச் செயலாகத் தப்பி அவ்விடத்தை விட்டு வந்தேன். வந்து கடைசியில் ரோந்துக்காரர்களிடம் அகப்பட்டுப் போலீஸ் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் என் தமக்கை குறித்த விலாசத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார். அவ்விடத்தில் அவள் இல்லை. பிறகு நானும் அவரும் திரும்பி வந்துகொண்டிருக்கையில் இங்கே கலகம் நடந்தது. போலீசார் அடிக்கப்படுவதைக் கண்ட இன்ஸ்பெக்டர் இங்கே ஏதாவது ஒரு வீட்டில் படுத்திருந்து பொழுது விடிந்தவுடன் ஸ்டேஷனுக்கு வரும்படி சொல்லிவிட்டு அவர் அவசரமாகப் போய்விட்டார். நான் உடனே இங்கே வந்தேன்.

கிழவி: - (இரக்கமாகவும் அனுதாபமாகவும்) ஒகோ! அப்படியா சங்கதி சரி; நானும் உனக்குத் துணையாக இந்தக் கட்டிடத்திலேயே படுத்துக் கொள்ளுகிறேன். பொழுது 19.3.IV-17