பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27 i

கால் நாழிகை நேரம் கழிந்தது. அந்தப்புரத்துக்குள்ளிருந்து யாரோ மூன்று ஸ்திரீகள் வெளியில் வந்ததைக் கண்ட இளவரசரும் சாமளராவும் கவனமாக அவர்களது முகத்தை உற்று நோக்கினர். ஒரு ஸ்திரீஜரிகைப் புட்டாக்கள் நிறைந்த பனாரீஸ் பட்டினால் ஆன ஒர் அங்கியால் தனது தலை முதல் தால் வரையில் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாள். கண்களுக்குத் துளைகள் விடப்பட்டிருந்த இடங்களிலும், ஒரங்களிலும் முத்துகளும், பவழங்களும், இன்னும் பலவகையான மணிகளும் வைத்து இழைக்கப் பட்டிருந்தன. அந்த அற்புதமான விலையுயர்ந்த அங்கி தகத் தகாயமாக மின்னியது அந்த அங்கிக்குள் இருந்தது ஒரு ராஜஸ்திரீ யென்பதை அது எளிதில் காட்டியது. அவளோடுகூட வந்த இன்னம் இரண்டு ஸ்திரீகளும் தங்களை அங்கியால் மறைத்துக் கொள்ளாமல் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களும், அற்புத தேஜசும் நன்றாக ஜ்வலிக்க வெளிப்படையாகத் தோன்றினர். அவர்களும் அபாரமான எழிலும், யெளவனமும் நிறைந்த அற்புத வசீகர மெல்லியளாராக விளங்கினர். அவர்களை உற்று நோக்கிய சாமளராவ், ‘அங்கிக்குள் வருகிறவர் இன்னாரென்பது தெரியாவிட்டாலும் பக்கத்தில் வரும் தாதிகளிருவரும் நம்முடைய அம்மன் பேட்டை தனம், அபிராமி என்பது நன்றாகத் தெரிகிறது” என்றான்.

இளவரசரும் உடனே நன்றாகக் கூர்ந்து பார்த்து, ‘ஆம்; ஆம் தனமும், அபிராமியுந்தான் கூட வருகிறார்கள். அங்கிக்குள் வருவதுவேறே யாராக இருக்கப் போகிறாள். அந்த துஷ்டை தான் வருகிறாள் போலிருக்கிறது. இந்தப் பெண்பிள்ளை களின் துரோக சிந்தையைப் பார்த்தாயா? கூத்தாடி அன்னத்தம்மாளுடைய பெண்கள் எல்லோரும் என்னிடம் எவ்வளவோ பிரியமாக இருந்து வேடிக்கையாக விளையாடிய வர்கள். அவர்கள் இப்போது எவ்வளவு தூரம் மாறிப்போய், என் சம்சாரம்துன்மார்க்கத்தில் இறங்குவதற்கு எவ்வளவுதூரம்

go.g.iv.–48