பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பூர்ணசந்திரோதயம்-4 அனுகூலமாக நடந்து கொள்கிறார்கள், பார்த்தாயா? ஸ்திரீகள் வெளிப்பார்வைக்கு மகா நல்லவர்கள் போலவும், நம்மிடம் வாஞ்சையுள்ளவர்கள் போல இருந்தாலும், அவர்கள் எப்போதும் அப்படியே இருப்பார்களென்று நாம் நம்பவே கூடாது. அவர்கள் அற்பசித்தம் உடையவர்கள். இன்றைய தினம் அவர்கள் ஒருவனைக் கண்ணுக்குக் கண்ணாக மதிப் பார்கள்; நாளையதினம் அவனை விட்டு வேறொரு வனைப் பிடித்துக் கொள்வார்கள், உறுதி என்பதற்கும் அவர்களுக்கும் வெகுதூரம்’ என்று நிரம்பவும் விரக்தியாகவும் அருவருப்பாகவும் கூறினார்.

அதைக்கேட்ட சாமளராவ், “சரி; நாம் இனிப் பேசிக்கொண்டு வெளியில் இருப்பது கெடுதலாக முடியும். ஆகையால், நாம் மேடையின் அடியில் போய் ஒளிந்து கொள்வோம்’ என்று தணிவான குரலில் கூறினான். உடனே இளவரசரும் சாமளராவும், சலவைக்கல் மேடையின் அடியில் வளைவாகக் குடைந்து விடப்பட்டிருந்த இடைவெளிக்குள் நுழைந்து கை கால்களை முடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அந்த மேடை சுமார் ஆறடி அகலமிருந்தது. ஆகையால், அவர்களிருவரும், அந்தக் குடைவிற்குள் சிறிது தூரம் உள்ளேபோய் மறைந்து கொண்டு ஒசை செய்யாமலும், மூச்சை அடக்கி விடுத்தும், யாராவது வருகிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தனர்.

கால் நாழிகை நேரம் சென்றது. யாரோ இருவர் வந்து அந்த மேடையின்மேல் உட்கார்ந்து கொண்டதாகத் தோன்றியது. உடனே மல்லிகை ரோஜாமுதலிய மலர்களின் பரிமளகந்தமும், அத்தர், புனுகு, ஜவ்வாது, சந்தனம் முதலியவற்றின் வாசனையும் ஒன்றுகூடி மனமோகன வசீகரமான நறுமணம் கமகமவென்று வீசத்தொடங்கி இளவரசரும் சாமளராவும் இருந்த இடத்திலும் வந்து இன்பகரமாக மோதியது. ஸ்திரீயின் காலில் அணியப்பட்டுள்ள பாதரசம் சிலம்பு முதலியவற்றின் கலீர்கலிர் என்ற ஒசையும், கையிலிருந்த வளையல்களின் கலகலவென்ற