பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273 ஓசையும் கேட்டன. அவைகளை உணர்ந்த இளவரசரது மனதில் பலவகையான உணர்ச்சிகளும், விகாரங்களும் பொங்கி எழுந்து அவரது மூர்க்கக்குணத்தைக் கிளப்பிவிட்டன. அந்தச் சமயத்தில் தான் பதறக் கூடாது என்ற நினைவினால் அவர் தமது மனதை அடக்கியவராய் நிரம்பவும் பொறுமையோடு மேடையின் கீழ்ப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது ஒருவரது பேச்சுக்குரல் கேட்டது. அது தனிவாகவும் காதிற்கு இனிமையாகவும் இருந்தது. ஆனாலும், ஆண்பிள்ளையின் குரல்போல இருந்தது. அவ்வாறு பேசிய மனிதன் காதற் பெருக்கினாலும், வாஞ்சையின் மேலீட்டினாலும் இளகி உறுகி நிரம்பவும் உருக்கமாகப் பேசத் தொடங்கி, ‘கண்ணே லலிதகுமாரி உன்மேல் இருக்கும் அங்கியை இதோ நானே கழற்றுகிறேன். நீ பிரயாசைப் பட வேண்டாம். உன்னுடைய பலஹீனமான நிலைமையில், நீ என்னை நாடி இவ்வளவு தூரம் வந்தது உனக்கு அதிக அலுப்பாக இருக்கும் ‘ என்று கூறிய வண்ணம், அவளது அங்கியை விலக்கி வைத்ததாகத் தெரிந்தது.

உடனே அந்த ஸ்திரீ தேன்போலக் கனிந்த தனது இனிய குரலால் பேசத்தொடங்கி, ‘மோகனராவ் ஆகா! நீ என்மேல் வைத்திருக்கும் நிகரில்லாத இந்தப் பிரியத்திற்கு உனக்கு நான் எதைத்தான் கொடுத்தாலும், ஈடாகாதென்றே நினைக்கிறேன். ஒரு நாளில் ஒரு rணநேரமாவது, உன்னுடைய முகத்தைப் பார்த்து ஆனந்தமடையாவிட்டால், எனக்கு என் அந்தப்புரத்தி லேயே இருப்புக் கொள்ள மாட்டேன் என்கிறது. உடம்பு பறக்கிறது. கண்கள் ஏங்குகின்றன. சாப்பாடு, தூக்கம் முதலிய எதிலும் மனம் செல்ல மாட்டேன் என்கிறது. ஏதோ பித்துப் பிடித்ததுபோல ஆகிவிடுகிறது. எதைப் பார்த்தாலும் இன்பகரமாகத் தோன்றுகிறதில்லை. எல்லாம் பாழாகக் காணப்படுகிறது. என் உடம்பு எவ்வளவு கேவலமான ஸ்திதியிலிருந்தாலும், உன்னைப் பார்க்க வருவதென்றால்,