பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 279 லிருந்தனர். அதன்பிறகு நான் உனக்கு ரகசியமான செய்திகள் சொல்லியனுப்பியதில் இருந்து நீதான் என்னுடைய சிநேகிதன் என்பதை யூகித்துக் கொண்டு அதைப் பற்றி என்னைக் கேட்டனர். நானும் அதை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. விஷயங்களையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டும் தெரிந்து கொள்ளாதவர்கள்போலவே இருந்து வருகிறார்கள். அவர்களை நம்பி நீ எந்த விஷயத்தையும் அவர்களிடம் சொல்லியனுப்ப லாம். குழந்தை பிறந்தவுடனே அவர்கள் உன்னிடம் வந்து அந்த சங்கதியைத் தெரிவிப்பார்கள். அதைப் பார்க்க வேண்டுமென்று நீஆசைப்பட்டால், அவர்களிடம் ஒரு வார்த்தை சொல். உடனே அவர்கள் உன்னை அழைத்துப்போய்க் காட்டுவார்கள்.

மோகனராவ்:- அப்படியே செய்கிறேன். அது இருக்கட்டும். இந்த விஷயம் உன் தகப்பனார் தாயார் முதலியவர்களுக்குக் கொஞ்சமும் தெரியவே தெரியாதா?

லலிதகுமாரி:- என் தகப்பனார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரிடம் இருந்து அவருக்குச் செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் என் தாய் கவனித்துக் கொண்டிருக் கிறாள். நான் எப்போதாவது ஒருதரம் போய் என்தகப்பனாரைப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னுடைய கர்ப்பத்தை என் தாயார் கவனித்திருக்க மாட்டாளென்று நினைக்கிறேன். அப்படி கவனித்திருந்தாலும், அவள் அதைப்பற்றி என் மேல் கோபங் கொள்ள மாட்டாளென்றே நினைக்கிறேன். தஞ்சாவூர் இளவரசன் என்னை இந்த இரண்டு வருஷகாலமாகப் புறக்கணித்து வைத்திருந்ததெல்லாம் அவளுக்குத் தெரியும். ஆகையால், நான் திருட்டுத்தனமாகவாவது சுகப்பட்டுப் போகட்டுமென்று நினைத்து, அதை அவ்வளவாகப் பாராட்டாமல் விட்டுவிடக் கூடியவள்தான். இருந்தாலும், விஷயத்தை அவர்களிடமெல்லாம் சொல்ல எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக்கிறது.