பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பூர்ணசந்திரோதயம் - 4 மோகனராவ்:- சரி; உன்னிஷ்டம்போலவே செய்யலாம். அதைப்பற்றி நீ இனிச் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. நாம் ஊரைவிட்டுப் போனபிறகு அந்தச் சங்கதி எப்படியும் தஞ்சாவூருக்கு எட்டும். எட்டினால், இளவரசர் ஆள்களை விட்டு நம்மைத் தேடினாலும் தேடுவார். அவர்களுடைய கண்ணிலெல்லாம் படாமல் எங்கேயாவது பத்திரமான இடத்தில் இருக்கவேண்டும்.

லலிதகுமாரி:- அந்த அயோக்கியன் ஆளை அனுப்பி நம்மைத் தேடுவர்ன் என்று நினைக்கிறாயா? அவன் ஒருநாளும் அப்படிச்செய்யமாட்டான். நான் அவனுடைய அரண்மனையில் அவனுக்கு ஒரடி தூரத்தில் இருக்கையில் என்னைத் தேடாத மனிதனா,நான் அவனை விட்டு ஒடிப்போன பிறகு என்னைக் கவனிக்கப் போகிறான். நான் போனதைப் பற்றி அவன் சந்தோஷப்படுவானே அன்றி கொஞ்சமும் விசனப்படவும் மாட்டான். நம்மைத் தேடவும் மாட்டான். ஆகையால், நமக்கு அந்த யோசனையே வேண்டியதில்லை. என் தாய் தகப்பனார் என்னைத் தேட ஆள்களை அனுப்புவது நிச்சயம். எல்லா வற்றிற்கும் நாம் புறப்பட்டுப்போகும்போது இவர்களுக்கு ஒரு கடிதமும், தஞ்சாவூரானுக்கு ஒரு கடிதமும் எழுதியனுப்பி விட்டுப் போய்விடவேண்டும். என்னுடைய புருஷன் என்னைக் கைவிட்டு விட்டதைக் கருதி நான் வேறொரு புருஷனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டுத் தூரதேசத்துக்குப் போய் விட்டேன். ஆகையால், என்னைத்தேட வேண்டாமென்று கடிதம் எழுதி இவர்களுக்கு வைத்துவிட்டு, அவனுக்கும் அனுப்பி விட்டுப் போய்விடலாம். அதைப் பார்த்து இவர்களும் பேசாமல் இருந்து விடுவார்கள். அவனும் பேசாமல் இருந்து விடுவான்.

மோகனராஷ்:- அதுவும் நல்ல யோசனைதான். நீ எல்லா விஷயங்களையும் ஏற்கெனவே முடிவுகட்டி அதற்குத் தகுந்த திட்டங்கள் எல்லாம் போட்டு வைத்திருக்கிறாய் உன்னுடைய