பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285 தகுந்த ஏற்பாடுகளையெல்லாம் நீ உடனே செய்து விடலாம். என்னைப்பற்றி நீ கொஞ்சமும் யோசிக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நீ புறப்பட்டு வருவதானாலும் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.

லலிதகுமாரி:- இந்த ஏற்பாட்டுக்கு நீ ஒருவேளை சம்மதிப்பாயோ மாட்டாயோ என்ற கவலைதான் என் மனசிலிருந்து வந்தது. ஏனென்றால், உனக்குத் தாயார் சம்சாரம் முதலியோர்கள் இருந்தால், நீ அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்து வந்துவிட சம்மதிக்க மாட்டாய் என்று நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக என்னுடைய முக்கியமான கவலை ஒழிந்தது. இனி எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. சண்டாளப் பாவியான என் புருஷன் முகத்தில் இனி முழிக்காமல் இருக்கும்படியான பெருத்த பாக்கியம் எனக்கு வாய்த்ததைப் பற்றியும் நாம் நம்முடைய குழந்தைகளை ஒளித்து வைக்கவேண்டிய துன்பம் இல்லாமல் போவதைப் பற்றியும் நான் இப்போது முதலே பெருத்த சந்தோஷம் அடைகிறேன். ஆனாலும், இந்தப் பிரசவத்துக்குத் தேவையான ஏற்பாடுகளெல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால், இது இவ்விடத்திலேயே சுலபமாக நிறைவேறிப் போகட்டும். அதன்பிறகு நான் இவ்விடத்திலேயே இரண்டு மூன்று மாதகாலம் இருந்து என் உடம்பைத் தேற்றிக் கொள்ளுகிறேன். அதற்குள் என் தகப்பனாருடைய உடம்பும் குணப்பட்டுவிடும். அவர் குணமடைவதற்குள், நான் காணாமல் போய்விட்டால், அந்த விசனத்தைப் பொறுக்க முடியாமல் என் தகப்பனார் இந்த வியாதியிலிருந்து மீளாமல் இன்னமும் அதிக கேவலமான நிலைமைக்கு வந்துவிடுவார். குழந்தையும் அதற்குள் கொஞ்சம் பெருத்துப் போகும். இவைகளை எல்லாம் உத்தேசித்து நாம் இந்த ஊரில் எப்படியும் இன்னமும் இரண்டு மூன்று மாசகாலம் அவசியம் இருக்க வேண்டியிருக்கிறது.