பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 - பூர்ணசந்திரோதயம்-4 லலிதகுமாரி:- நீ என்ன செய்வாய்? உன்பேரில் நான் குறை கூற என்ன நியாயமிருக்கிறது? நான் பிரியப்பட்டு உன்னைத் தேடிப் பிடித்தேன். இனி எப்போதும் உன்னை நான் கைவிடப் போகிறதே இல்லை. இப்போது நான் யோசிக்கிறதெல்லாம் கூடி, இனி நாம் தஞ்சாவூருக்குப் போய் ஒளிந்திருந்தபடி ஒருவரை ஒருவர்சந்தித்து, கண்ணுக்குக் கண்ணான நம்முடைய குழந்தைகளை ஒளித்து அன்னியர்களிடம் அநாதைகளாக விடுத்து வைத்து அவைகளோடு நாம் கொஞ்சிக் குலாவி சீராட்டும் ஆனந்தத்தை இழந்து பலவகையில் துன்பங்களையும் இடையூறுகளையும் அனுபவிப்பதைவிட, பட்டமகிஷி என்ற இந்த வெறும் பெருமையையும் ஆடம்பரத்தையும் அறவே ஒழித்துவிட்டு நீயும் நானும் கண்காணாத ஒர் ஊருக்குப் போய் ரகசியமாக இருந்து ஆயிசுகால பரியந்தம் சந்தோஷமாக வாழலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நான் இவ்விடத்தி லிருந்து புறப்பட்டு வரும்போது ஏராளமான திரவியத்தையும் ஆபாரணங்களையும் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன். நாம் எங்கேயாவது தூரதேசம் ஒன்றுக்குப் போய், நமக்குத் தெரிந்த மனிதர் எவர் கண்ணிலும் படாமல் செளக்கியமாக இருப்போம். அதற்கு நீ சம்மதிக்கிறாயா?

மோகனராவ்:- ஆகா இந்த விஷயத்திலும் சரி, வேறு எந்த விஷயத்திலும் சரி; நீ என்னுடைய சம்மதத்தைக்கூடக் கேட்க வேண்டுமா? நீ உன்னுடைய சம்மதப்படி எனக்கு எவ்விதமான கட்டளை வேண்டுமானாலும் பிறப்பிக்கலாம். அதை நான் சிரசாக வகித்து அதன்படி நடக்கக் காத்திருக்கிறேன். நீ பிரஸ்தாபிக்கும் விஷயத்தில் நான் ஆட்சேபிப்பதற்கு என்ன இருக்கிறது? கரும்பு தின்ன யாராவது கூலி கேட்பார்களா? நீயும் நானும் சகல சம்பத்துகளோடும் எப்போதும் ஒன்றாக இருப்பதைவிடப் பெரிய பாக்கியம் இந்த உலகத்திலேயே வேறே இருக்கப் போகிறதா இல்லவே இல்லை. ஆகையால், உன் பிரியப்படியே நாம் தனியாகப் போய்விடலாம். அதற்குத்