பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பூர்ணசந்திரோதயம்-4 உடனேசாமளராவ் அவரைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கூடிணத்தில் கள்ளக்காதலர் இருவரும் அவ்விடத்தை விட்டுப் போய் விட்டனர் என்பது தெரிந்தது. அரை நாழிகை சாவகாசம் கழிந்தது. சலவைக்கல் மேடைக்குள்ளிருந்த மனிதர் இருவரும் சந்தடி செய்யாமல் நகர்ந்து மெதுவாக வெளியில் வந்து தலையை நீட்டிப் பார்த்தனர். யாரும் அவ்விடத்தில் காணப்படவில்லை. இருவரும் உடனே வெளியில் வந்து, நாற்புறங்களிலும் திரும்பிப் பார்க்க, அந்தப்புர வாசலண்டை யிலிருந்த லாந்தர்க் கம்பத்தடியில், தாதிகள் இருவரும், லலிதகுமாரி தேவியின் மேல் பனாரீஸ் அங்கியைப் போர்த்துக் கொண்டிருந்தனர். லலிதகுமாரி தேவியின் முதுகுப் பக்கமே இளவரசருக்குத் தெரிந்தது. ஆனாலும், அவளது சிரத்தில் ராணிமுடி இருந்ததையும், உடம்பு முழுதும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததையும், முன் பக்கத்தில் வயிறு புடைத்து நீண்டிருந்ததையும் இளவரசர் சந்தேகமறக் கண்டு வியப்பே வடிவாக மாறி ஸ்தம்பித்து நின்று, “என்னசாமளராவ்! இன்னமும் நமக்கு வேறே சாட்சி கூட வேண்டுமா? போதுமல்லவா எனக்குக் கிடைத்த மரியாதை நாம் இன்னமும் சில தினங்கள் இருந்தால், மேலும் அநேக ரகசியத்தை வெளிப்படுத்துவதாக நம்முடைய கடிதத்தில் எழுதி யிருக்கிறான். நமக்கு இதுவே போதுமானது. இனி நாம் பார்க்கவேண்டிய விஷயம் ஒன்றும் பாக்கியில்லை. பொழுது விடிவதற்குள் நாம் இந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போய்விடுவதுதான் நல்லது’ என்றார்.

உடனே சாமளராவ், “நாம் இவ்வளவோடு போனால் பூரண சந்திரோதயம் நம்முடைய பேச்சை நம்புவாளா? இன்னம்

கொஞ்ச காலமிருந்து அவளுக்குத் திருப்திகரமாக ஏதாவது சாட்சியம் சம்பாதித்துக்கொண்டு போவோம்’ என்றான்.