பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295 அப்போதைய நிலைமை பரமாநந்த சுகமே மயமாக நிறைந்ததாய் இருந்ததனால், அவளது மனநிலைமை சொற்களால் விவரிக்க இயலாததாக இருந்தது. கிழவிதன்னிடம் அன்பாகப் பேசித் தனக்குத் தண்ணிர் உபசாரம் செய்ததிலிருந்து அவர்கள் தனது உயிருக்கு எவ்வித ஹானியும் கருதவில்லை யென்பது ஒருவாறு விளங்கியது. ஆனாலும், தன்னிடம் ஏதோ துன்மார்க்கமான எண்ணம் கொண்டே அந்த முரட்டுத் திருடன் தன்னை அவ்வளவு தூரம் துக்கிச் சுமந்து அவ்விடத்திற்குக் கொணர்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. தான் நற் குலத்தில் பிறந்து உயர்ந்த இடத்தில் வளர்ந்து, கடைசியில் புருஷன் விஷயத்தில் துர்ப்பாக்கியவதியாக இருந்ததுபோல இறுதியில் தான் திருடனுக்கும் பெண்டாட்டியாகத் தனது தலையில் பிரம்மன் எழுதி இருப்பானோ என்ற சிந்தனையும், கலக்கமும், கவலையும் அவளது மனதைக் கவர்ந்து அவளை வதைத்துக் கொண்டிருந்தன. புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம் என்பது போல அவர்கள் இருவரும் தன்னைத் தனிமையில் விடுத்து அப்பால் போயிருந்தது அவர்கள் தனது விஷயத்தில் ஏதோ சதியாலோசனை செய்கிறார்கள் என்பதைக் காட்டியதாக அவள் நிச்சயித்துக் கொண்டாள். தொடக்கத்திலிருந்து அதுவரையில் அவள் அந்தத் திருடனது முகத்தை வெளிச்சத்தில் பார்க்க வில்லை. ஆதலால் அவனது முகம் எவ்வளவு பயங்கரமாக இருக்குமோவென்றும், அவன் தன்னை என்ன செய் வானோ என்றும் நினைத்து திகில் கொண்டவளாய் உட்கார்ந்திருந்தாள்.

கால் நாழிகை நேரம் கழிந்தது. கட்டாரித்தேவன் திடீரென்று அவளுக்குமுன் வந்து நின்றான். அவனைப் பார்த்து அவனது அடையாளத்தை ஒரு rணத்தில் கண்டுபிடித்துக்கொண்ட லீலாவதி முற்றிலும் திகைப்பும் பிரமிப்பும் ஆச்சரியமும் அடைந்தாள். ஆனாலும் அவளது மனதில் ஒருவித துணிவும்