பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பூர்ணசந்திரோதயம்-4 அடுத்த rணத்தில் பாட்டிக் கிழவி தனது கையில் ஒரு புதிய பாயையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு லீலாவதி இருந்த இடத்திற்கு வந்து, “ஏம்மா! நேரமாவலியா? ஏன் சும்மாக் குந்திகிட்டு இருக்கிறே. இதோ இந்தப் பாயெ விரிச்சு அப்பிடியே படு. நாயக்கரு மொதக்கட்டுலே இருப்பாரு. இங்கிட்டு வரமாட்டாரு! நீ பயப்படாமெப் படுத்துத் தூங்கு” என்றாள்.

லீலாவதி அப்போது அவளிடம் பேச்சு வளர்க்கப் பிரியப் படாதவளாய்,அவளால் கொடுக்கப்பட்ட பாயை வாங்கி ஒரு பக்கமாகப் பிரித்துத் தலையணையை வைத்துக்கொண்டு படுத்தவளாய், ‘அம்மா இருளாக இருந்தால் எனக்குப் பயத்தினால் தூக்கம் வராது; விளக்கு எரிந்து கொண்டே இருக்கட்டும் என்றாள். o

கிழவி, “சரி; அப்படியே ஆகட்டும்’ என்று கூறிய வண்ணம் விளக்கை அணைக்காமல் வைத்துவிட்டு முன் கட்டிற்குப் போய்ச் சிறிது நேரம் இருந்தபின் மறுபடியும் திரும்பிவந்து, ‘சரி; நீ தனியாகப் படுத்திருக்க பயப்படுவே; ஒனக்குத் தொணையாநானும் இங்கிட்டே படுத்துக்கறேன்’ என்று கூறிய வண்ணம் இன்னொரு பாய் தலையணை முதலியவைகளைச் சிறிது தூரத்திற்கப்பால் போட்டுப் படுத்துக் கொண்டாள். அங்கிருந்த விளக்கு நிரம் பவும் அற்பமான திரியுள்ளதும், விளக்கெண்ணெய் விடப் பெற்றதுமான சிறிய மண் விளக்காதலால் அது மங்கலாக முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. லீலாவதியின் மனம் முற்றிலும் கலவர மடைந்து குழம்பி சஞ்சலமுற்றிருந்தது. ஆகையால், அந்த முரட்டுத் திருடன் தன்னுடைய நிபந்தனையை ஒப்புக் கொண்டதுபோலப் பாசாங்கு செய்து தன்னை நம்பவைத்துத் தான் தூங்கிய பிறகு விளக்கை அனைத்துவிட்டுத் தன்னிடம் வந்து ஒருகால் பலாத்காரத்தில் இறங்குவானோ என்ற சந்தேகம் அவளது மனத்தில் எழுந்து அவளை எச்சரித்துக் கொண்டி