பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3O7

ருந்தது. ஆகையாலும், அவளுக்குத்துக்கமென்பதே பிடிக்காம லிருந்தது. தனக்கு ஒருகால் தூக்கம் வருவதாக இருந்தால்கூட, தான் அந்த இரவு முழுதும் தூங்காமல் விழிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டுமென்று, அவள் தன் மனதைத் திடப்படுத்தித் தனது உடம்பைத் தளரவிடாமல் மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் தோற்றுவித்த வளாய் இருந்தாள். ஆனாலும், அவள் தூங்குகிறவள் போலக் கண்களை மூடிக்கொண்டு தான் எவ்வாறு தந்திரம் செய்து அவ் விடத்திலிருந்து தப்பித்துக்கொண்டு வெளியில் போகிற தென்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தவளாய்ப் படுத்திருந்தாள். அதுபோலவே, அந்தக் கிழவியும் தூங்குகிறவள் போலக் கண்களை மூடிக் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தாள். ஆனாலும், உண்மையில் விழிப்பாகவும் எச்சரிப்பாகவும் இருந்தாள். ஏனென்றால், தான் அயர்ந்து தூங்கிப் போய் விட்டால், லீலாவதி அவ்விடத்திலிருந்து தப்பித்துப் போக நினைத்துத் தனக்கு ஏதேனும் தீங்கு செய்வாளோவென்று அஞ்சியவளாய் அந்தக் கிழவிதுங்காமலேயே இருந்தாள்.

அவ்வாறு அந்த இரவு முழுதும் கழிய, பொழுதும் விடிந்தது. கிழவி இரவில் கண்விழித்து விழித்துப் பழகினவளாதலால், அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக எழுந்து தனது அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினாள்.

லீலாவதியோ முற்றிலும் அலுத்துத் தளர்ந்து போனாள். அவளது கண்களில் எரிச்சலும், மனதில் மயக்கமும், குழப்பமும், உடம்பில் கடுமையான வலியும், கடுப்பும், ஒய்வும் நிறைந்திருந்தன. ஆதலால், அவள்படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமற்றவளாய் அப்புறம் இப்புறம் புரண்டபடி படுத்திருந்தாள். சூரியன் நன்றாக உயர உயர வெயில் பளிச்சென்று வீசத் தொடங்கியது. அதற்கு மேல் பாயில் படுத்திருப்பது அவளுக்கு நிரம்பவும் துன்பகரமாக இருந்தது. ஆகவே, அவள் மெதுவாக எழுந்து பாயின்மீது உட்கார்ந்து