பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 பூர்ணசந்திரோதயம்-4 கொண்டாள். அதுவரையில் அங்குமிங்கும் சுறுசுறுப்பாகப் போய் வந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்த கிழவி அவளிடம் வந்து, “ஏம்மா எழுந்துவா; கொல்லெப்பக்கம் போயிக் கைகாலெல்லாம் கழுவிக்கோ, சமையலாயிப் போச்சு;

சாப்பிடலாம்’ என்று அன்பாகக் கூறினாள்.

அதைக் கேட்ட லீலாவதி, “பாட்டீ இதற்குள் சமையலாய் விட்டதா? அடாடா? எனக்காக நீங்கள் நிரம்பவும் பிரயாசை எடுத்துக்கொண்டு இதற்குள் சமையல் செய்திருக்கிறாப் போலிருக்கிறதே! நீங்கள் இப்படி செய்கிறீர்களென்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அப்போதே வேண்டாமென்று சொல்லியிருப்பேனே என்றாள்.

கிழவி, ‘அப்பிடியானா, நீ இண்ணெக்கி இங்கிட்டு சாப்பிடவே போறதில்லையா? ராத்திரி ஊருக்குப்போற மட்டும். சாப்பிடாம சொம்மாபட்டினி கெடக்கப் போறியா?” என்றாள்.

லீலாவதி நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, ‘இல்லை பாட்டீ எனக்கு உடம்பு சரியாக இல்லை. வயிற்றில் பசியே கானோம். அஜீரணமாக இருக்கிறது. மனசும் கலக்கமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் இன்று பகல் முழுதும் பட்டினியாக இருந்தால் சாயுங்காலத்துக்குள் உடம்பு சரிப்பட்டு விடுமென்று நினைக்கிறேன்’ என்றாள்.

கிழவி:- இல்லேடியம்மா! அப்பிடிச் செய்யப்படாது. ஒரு கவளமாச்சும் நீ சாப்பிடாம இருந்தா உடம்பு சுத்தமாகக் கெட்டுப் போவும்; அண்ணாசாமி நாயக்கன் பொல்லாத கோவக்கார மனிசன். இந்த சங்கதியைக் கேட்டான்னா, என்னை ஒடனே கொண்ணு போட்டுடுவான். நீ எப்படியாச்சும் எந்திரிச்சி வந்து கொஞ்சூண்டு சாப்பிட்டுப் பேரு பண்ணிக்கோ என்று வருந்திக் கூறினாள்.

லீலாவதி:- (ஒரே உறுதியாக) இல்லை பாட்டீ சாதம் என்ற பேச்சை எடுக்கையிலேயே எனக்கு வாந்தி வரும்போல