பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 321 வைத்திருக்க வேண்டும் என்றும் அவள் தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவ்வாறு தான் பந்தோபஸ்தாக இருந்து இவனது துர்நினைவு நிறைவேறாமல் செய்துவிடும் பrத்தில் அவன் தன்மீது பகைமையும்துராங்காரமும் பாராட்டிதனக்கு ஏதேனும் துன்பம் செய்ய நினைத்து, பவானியம்பாள்புரம் ஜெமீந்தார் வெந்நீர் அண்டாவிற்குள் இறந்துபோய்ப் புதைக்கப்பட்ட விஷயத்தைப் போலீசாருக்கு அறிவித்துத் தன்னை அவமானத்துக்கும், இழிவுக்கும் கொலைக்குற்ற தண்டனைக் கும் ஆளாக்குவதோடு தான் மொட்டைக்கடிதம் எழுதித் தனது புருஷரைப் போலீசாரிடம் காட்டிக்கொடுத்த விஷயத்தையும் சிறைச்சாலையிலிருக்கும் தனது புருஷருக்கு எப்படியாவது தெரிவித்து விடுவான் என்ற எண்ணமும் தோன்றியது; ஆகையால், சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன்காலில் விழுவதே உசிதமானது என, தான் அந்த முரட்டுத் திருடனது வசத்தில் அகப்பட்டுக் கொண்டு அதனால் அவமானத்துக்கும் பழிப்புக்கும் ஆளாவதைவிடதானே நேரில் சென்று, இறந்துபோன ஜெமீந்தாரது புத்திரரான நீலமேகம் பிள்ளையைக் கண்டு உண்மையை வெளியிட்டு அவர் தன் மீது வழக்குத் தொடராமல் செய்து, அவர் மூலமாகப் போலீசாரிட முள்ளதும், தன்னால் எழுதப்பட்டதுமான மொட்டைக் கடிதத்தையும் மற்ற கடிதங்களையும் வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற யோசனை அவளது மனதில் உதித்தது. ஆகவே, தான் அப்போதே நேராக மேற்கு ராஜ வீதிக்குப் போய் அவ்விடத்தில் 20வது இலக்கமுள்ள மாளிகையி லிருக்கும் நீலமேகம் பிள்ளையைக் கண்டு பேசிவிட்டு அதன்பிறகு தனது மாளிகைக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு வண்டியை அந்த விலாசத்திற்கு ஒட்டும் படி வண்டிக்காரனுக்கு உத்தரவு கொடுத்தாள். அவ்வாறே அவன் வண்டியை விரைவாக மேற்கு ராஜவீதிக்கு ஒட்டிக்கொண்டு போய் பவானியம்பாள்புரம் ஜெமீந்தாரினது நான்கு உப்பரிகை வைத்த மாளிகையின் வாசலில் நிறுத்தினான்.