பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்

3ம் பாகம் தொடர்ச்சி....

லீலாவதி, ‘என்னிடம் நீர் என்ன விதமான உதவியை எதிர்பார்க்கிறீர்? அதை முதலிலேயே சொல்லிவிடுகிறதுதானே! மனசில் ஏதோ ஒரு கருத்தை வைத்துக்கொண்டு வளைத்து வளைத்து இவ்வளவு நேரம் ஏன் பேசவேண்டும் என்று கடுகடுப்பாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட கட்டாரித்தேவன், ‘ஏனம் மா என்னைக் கண்ட முதல் இப்படிக் கோபமாகப் பேசுகிறீர்கள்? நான் என்ன புலியா கரடியா? உங்களை எடுத்து விழுங்கிவிட வந்திருக்கிறேன் என்று நினைத்து இப்படி ஆத்திரப்படு கிறீர்களா? அப்படி நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யக் கூடியவனல்ல. பிறர் உங்களுக்கு எப்படிப் பட்ட கெடுதல் நினைப்பதாக இருந்தாலும், நான் என்னுடைய உயிரைக் கொடுத்தாகிலும், அப்படிப்பட்ட தீங்கு உங்களுக்கு நேராமல் காப்பாற்றக் கூடியவன் என்பதை நீங்கள் உறுதியாக எண்ணிக்கொள்ளலாம். உங்களுடைய புருஷருக்கும் எனக்கும் நெடு நாளைய சிநேகமல்லவா அவருக்கு நான் செய்துள்ள உபகாரங்கள் கணக்கில் அடங்குமா! அவராயிருந்தால், நான் வந்ததற்கு அவர் எனக்கு எத்தனையோ உபசாரம் செய்து என்னை மரியாதைப்படுத்தி இருப்பார். அவர் என்னிடம் வைத்திருந்த மதிப்பு எவ்வளவு என்பது உங்களுக்கு நேரில் தெரிந்திருந்தும், முன்பின் அறியாதவர்கள் போல நீங்கள் என்னிடம் கிடுகிடுவென்று பேசுகிறீர்கள். நீங்கள் அப்படிப் பேசினாலும், எனக்கு உங்கள்மேல் கொஞ்சமும் வருத்தம் உண்டாகவில்லை. போனதுபோகட்டும்; எனக்கு நேரமாகிறது; நான் வந்த கருத்தை வெளியிட்டு விடுகிறேன். அது உங்களுடைய மனசுக்குப்