பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O பூர்ணசந்திரோதயம் - 4 களும் ஷண்முகவடிவினது திருஷ்டியில் படவே, அவள் அப்படிப்பட்ட அசங்கியமான பொருட்களைப் பார்க்க வெட்கித் தனது கண்களை மூடிக்கொண்டாள். அபாரமான துக்கமும் அழுகையும் தோன்றி அவளது மனதை மீறி வெளிப்பட்டன. அவள் தனக்கு எதிரில் வந்து நின்ற கிழவரை நோக்கி மறுபடிநைவாகவும் பணிவாகவும் கெஞ்சத் தொடங்கி, “ஐயா! நான் பரம அநாதை; திக்கற்றவள். என்மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு துராசை? நான் உங்களுடைய சொந்தப் பெண்ணுக்குச் சமமானவள். வேண்டாம்? இதோடு என்னை விட்டு விடுங்கள். உங்களுடைய எண்ணம் ஒருநாளும் பலிக்கப் போகிறதில்லை. நீங்கள் பலாத்காரத்தினால் என்னைக் கெடுத்துவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால், அதுவரை யில் நான் என் உயிரை வைத்துக் கொண்டிருக்கப் போகிற தில்லை. இப்போதே என்னுடைய உயிரில் முக்கால் பாகமும்

பாய்விட்டது. நீங்கள் என்னைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கு முன் நான் வெகு சுலபமாக பிராணனை விட்டு விடுவேன்’ என்றாள்.

அதைக்கேட்ட கிழவர், “நீயாகப் பார்த்துப் பிராணனை விட்டு விடுவது சுலபமென்று பார்த்தாயா? எங்கே பார்க்கலாம். நீ பிராணனை விடு. இதோ நான் உன்னை விடுவிக்கிறேன்’ என்று கூறியவண்னம் நாற்காலியின் பின்புறமாகச் சென்று அவ்விடத்திலிருந்த ஒரு விசையை அழுத்த அவளைப் பிடித்துக் கொண்டிருந்த வளையங்கள் எல்லாம் சடக்கென்று விலகிக் கொண்டன. ஷண்முகவடிவின் உடம்பு மரத்துப் போயிருந்தது. ஆகையால், அவள் நாற்காலியைவிட்டு எழுந்திருக்க இயலவில்லை. கிழவர்தன்னை எவ்விதமான மானபங்கத்துக்கு ஆளாக்குவாரோ என்ற திகிலினால் அவளது ஸ்மரணை தவற ஆரம்பித்தது. மூளை குழம்பியது; சிரம் சுழன்றது. அவள் கண்களை மூடிக்கொண்டும் முன்னால் வளைந்து மேஜையின் மேல் சாய்ந்தாள். கிழவர் கரைகடந்த ஆசையோடும்