பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89 உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பாராக்காரன் வேலைக்காரி முதலியோருடைய உதவியால் சுவரைக் குடைந்து கொண்டு என்னுடைய அறைக்குள் வந்து கடைசிவரையில் தான் இன்னாள் என்பதை வெளியிடாமல் பலவிதமான சாகசக்கியங்கள் செய்து முடிவில் சகலமான குற்றங்களையும் என்மேல் சுமத்திவிட்டாள். அதைத் தவிர இன்னொரு பெரிய அக்கிரமும் நடத்தப்பட்டிருக்கிறது. என்னிடமிருந்த சொந்தக் கடிதங்களையெல்லாம் நீங்கள் எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்து, என்னுடைய குடும்ப வரலாறுகளையெல்லாம் அறிந்து, நான் கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்திருந்த பெண்ணினிடத்தில் ஏதோதப்பான முகாந்திரங்களைச் சொல்லி அவளையும் அழைத்துவந்து அவள் என்மேல் தவறான அபிப்பிராயம் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தை உண்டாக்கி, அப்போது அவளை அழைத்துவந்து காட்டி அவளுடைய மனசை நீங்கள் அநியாயமாகப் புண்படுத்திவிட்டீர்கள். அந்தப் பெண்னை நீங்கள் இப்போது உயிரோடு வைத்திருக்கிறீர்களா அல்லது கொன்றுவிட்டீர்களா என்ற விவரமும் தெரியவில்லை. இப்படிப்பட்ட பரம சண்டாளமான காரியங்களையெல்லாம் செய்து நான் சிறுகச்சிறுக இந்த சிறைச்சாலையிலேயே என்னுடைய பிராணனை விட்டுவிடும்படியான நிலைமையை உண்டுபண்ணியதோடு திருப்தியடையாமல் நீங்கள் இன்னமும் மேன்மேலும் ஏதேதோ சூழ்ச்சிகள் செய்து கொண்டி ருக்கிறீர்கள். நீங்கள் நிரம்பவும் பொறுப்பு வாய்ந்த பெரிய உத்தியோகத்தை வகிப்பவர்கள். நீங்களே இப்படிப்பட்ட இழிவான சதியாலோசனைகளுக்கு எல்லாம் இடங் கொடுத்தால், இந்த நகரத்திலுள்ள ஜனங்களுக்கு என்னவிதமான பாதுகாப்பு இருக்கப் போகிறது. இது வேலியே பயிரை அழிப்பது என்றே நியாயத்தைப் போல இருக்கிறது. ஜனங்களுடைய உரிமைகளைக் காப்பாற்றி ரகவிப்பதற்காகப் போலீசாரும் நியாயாதிபதிகளும் எவ்விடத்திலும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தத் தேசத்தில் மாத்திரம்