பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 என்பது நிச்சயமாகத் தெரிகிறது. நீங்களும் அந்தப் பெண்ணும் பாராக்காரனும் சொன்னதை வேதவாக்கியமாக நம்பி நியாயாதிபதியும் தீர்ப்புச் செய்துவிட்டார் போலிருக்கிறது. பாழும் ஊருக்கு நரிராஜன் என்பதுபோல நீங்கள் வைத்ததே சட்டமாக இருக்கிறது. நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தின் பெருமை என்ன? கெளரதை என்ன? நீங்கள் செய்யத் தொடங்கிய காரியமென்ன? அந்தப் பெண் கேவலம் தாசிப் பெண். அவளுக்கு என்னைப் புருஷனாகச் சேர்த்து வைக்கும் இழிதொழிலை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதற்காக இத்தனை பாடுபட்டுச் செய்யத்தகாத காரியங்களைச் செய்திருக்கிறீர்களே! அதை நினைக்க நினைக்க என் மனமே கூசுகிறது. இதுவரையில் அந்தப் பெண்களினிடத்தில் நான் எப்படிப்பட்ட மன உறுதியோடு நடந்து கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அந்த உறுதியை மீறி நான் இனியும் நடப்பவனல்ல. அதனால் என் உயிர் போவதானாலும் போகட்டும். நான் அந்தப் பெண்ணோடு வாழ வேண்டும் என்று நியாயாதிபதி செய்திருப்பதாகச் சொல்லும் அநியாயத் தீர்ப்புக்கு நான் ஒரு நாளும் கட்டுப்படவும் மாட்டேன். நீங்கள் சொல்லும் ஒப்பந்தத்துக்கும் நான் இணங்க மாட்டேன். என்னை நீங்கள் சாதாரணமாக விட்டால் விடுங்கள். இல்லையானால் என்னை நீங்கள் வேறே எந்தக் கொடுமைக்கு ஆளாக்கினாலும் ஆளாக்கலாம். அதற்கெல்லாம் நான் பின் வாங்குகிறவனல்ல. நீங்கள் என் விஷயத்தில் செய்த மற்ற சகலமான அநியாயங்களையும் நான் பொறுத்துக்கொள்வேன். ஆனால், நீங்கள் எனக்குச் சம்சார மாகப் போகிற பெண்ணை ஏமாற்றி அவளை இந்த ஊருக்கு அழைத்து வந்த கொடுமையை மாத்திரம் நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன். அந்தப் பெண்ணை நீங்கள் இப்போது எங்கே வைத்திருக்கிறீர்கள் என்பதையும் சொல்லி, அவளுக்கு நான் ஒரு கடிதம் எழுதவும் அனுமதி கொடுப்பீர்களானால், நீங்கள் இதுவரையில் செய்த தீங்குகளுக்கு எல்லாம் அது ஒர் ஆறுதலாக இருக்கும்’ என்றான். -