பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 உங்களுடைய முகவாட்டத்தைப் பார்த்தால், நீங்கள் காலையி லிருந்து இன்னமும் சாப்பிடவில்லை போலத் தோன்றுகிறது; இவ்விடத்திலேயே கொஞ்சம் ஆகாரம் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உடனே புறப்பட்டுப் போகலாம்’ என்றார்.

லீலாவதி:- நான்காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் பரவாயில்லை. நாம் இன்ஸ் பெக்டரிடம் போனபின் நான் அவ்விடத்திலிருந்து எங்களு டைய ஜாகைக்குப் போய் ச் சாப்பிட்டுக் கொள்ளுகிறேன். இப்போது அவசரமில்லை; புறப்படுங்கள் போகலாம். என்றாள்.

உடனே இருவரும் புறப்பட்டு வெளியில் நடந்தனர்.

40 - வது அதிகாரம்

சவப்பரிசோதனை - புதிய ரகசியம்

அன்றையதினம் இரவு சுமார் எட்டுமணி சமயமிருக்கலாம். வெண்ணாற்றங்கரை என்னும் ஊரில் அதற்குமுன்லிலாவதியும் மாசிலாமணிப் பிள்ளையும் வசித்திருந்த பங்களாவின் வாசலில் இரண்டு குதிரை வண்டிகள் வந்து நின்றன. அவர்கள் அந்த மாளிகையைவிட்டு மைசூருக்குப் போனதுமுதல் அதுவரையில் வேறே யாரும் அவ்விடத்தில் குடியேறவில்லை ஆதலால், அது காலியாகவே இருந்தது. அதன் சொந்தக்காரரிடத்தி லிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அதைச் சில நண்பருக்கு காட்ட வேண்டுமென்ற முகாந்திரத்தின்மேல் அதன் திறவு கோலை அன்றைய தினம் பகலிலேயே வாங்கி வைத்துக் கொண்டிருந்தார். வண்டிகள் வந்து நின்றவுடனே ஒன்றிலிருந்து போலீஸ் இன்ஸ் பெக்டர், நீலமேகம் பிள்ளை, இரண்டு வைத்தியர்கள் ஆகிய நால்வர் இறங்கினார்கள்; இன்னொன்றி லிருந்து லீலாவதி கீழே இறங்கினாள். மறுபடி பத்து, அல்லது, பதினொரு மணி சமயத்துக்கு மூன்றாவது வண்டி ஒன்றையும்